:

கொட்டும் மழை நீ எனக்கு!

கொட்டும் மழை நீ எனக்கு!

கண்ணில் கவிபாடும் காதல் பூங்குயிலே
என்னுள்ளம் ஏங்கும் குறிஞ்சி மலரே
கனவினைத் துறந்து நிழலில் வீழ்வேன்
கவிதையாய் எழுந்து உன்னைச் சேர்வேன்

எதுகை தாங்கும் மோனை ஆவேன்
முதுமை தொட்டாலுமுன் மழலை நானே
சிறுமை கொள்வேன் சீரியக் காதலுக்கு
வருடி மகிழ்வாய் மடியை பரிசளித்து

திருடனைத் தேடி திரும்பிய நாணமே
குருடனாய் ஆகிட காதல் செய்வேன்
மனத்தில் மிளிர்வேன் மௌன மழையாய்
ஊரெல்லாம் வெள்ளமே என்னிலோ உயிர்நீரே நீ…!

வி.அன்னராஜேஷ்
மேலூர்.

print

Comments

comments

Thamarai

Related Posts

leave a comment

Create Account



Log In Your Account



  • குறைந்த விலையில் பிறந்தநாள் வாழ்த்து '' திருமண வாழ்த்து'' மரண அறிவித்தல் நினைவு நாள் '' மற்றும் ஏனைய விளம்பரங்கள் '' தாமரை பக்கத்தில் செய்ய உடன் அழையுங்கள் +94752017793
close