Thamarai News

தாமரை செய்திகள்

Archives

now browsing by author

 

கிளிநொச்சி பூநகரி பிரதேசசபைக்கான தேர்தல் முடிவுகள்

நடந்து முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

இதன்படி, கிளிநொச்சி மாவட்டம் – பூநகரி பிரதேசசபைக்கான முடிகள் வெளியாகியுள்ளன.

0

யாழ். வலிகாமத்தின் உத்தியோகபூர்வமான தேர்தல் முடிவுகள்!

நடந்து முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

இதன்படி, யாழ். வலிகாமம் கிழக்கு பிரதேச சபைக்கான முடிகள் வெளியாகியுள்ளன.

இதேவேளை, சுயேட்சை குழுக்கள் 3858 வாக்குகளையும், 4ஆசனங்களையும் பெற்று கொண்டுள்ளது.

 

பதுளை மாவட்ட ஹப்புத்தளை பிரதேசசபைக்கான தேர்தல் முடிவுகள்!

நடந்து முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
பதிவுசெய்யப்பட்ட மொத்தவாக்குகள் – 2394
அளிக்கப்பட்ட வாக்குகள் – 2455
நிராகரிக்கப்பட்டவை – 61
செல்லுபடியான வாக்குகள் – 2881

கட்சிகள்                                                               வாக்குகள்                ஆசனங்கள்

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி                    1610                                 08

ஐக்கிய தேசியக் கட்சி                                             666                                  03

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன                               59                                    0

மக்கள் விடுதலை முன்னணி                                  59                                     0

 

 

0

பாலையடிவட்டையில் நடைபெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் உள்ளுராட்சித் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில உரையாற்றும்.சோ. கணேசமுர்த்தி அவர்கள் இவ்வாறு தெரிவித்தார்.

தமிழ் மக்களுக்கு பசப்பு வார்த்தைகளைக் கூறி மக்களை உணர்ச்சிவசப்படுத்தி அந்த நெருப்பில் குளிர் காய்பவர்கள் நாங்கள் அல்ல. மக்களோடு மக்களாக தோளோடு தோள்நின்று மக்களுக்காக சேவையாற்றியவர்கள் நாங்கள் என முன்னாள் பிரதி அமைச்சரும், பட்டிருப்பு தேர்தல் தொகுதி ஐக்கிய தேசிய கட்சியின் அமைப்பாளருமாகிய சோ. கணேசமூர்த்தி தெரிவித்தார்.
மட்டக்களப்பு – பாலையடிவட்டையில் நடைபெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் உள்ளுராட்சித் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் அங்கு உரையாற்றுகையில்,.

நான் கடந்த காலத்தில் எந்த அபிவிருத்தியினையும் செய்வில்லை என்றும், பயங்கரவாத சட்டத்துக்கு பாராளுமன்றத்தில் கை உயர்த்தியவன் என்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயலாளரும் முன்னாள் கிழக்கு மாகாண சபையின் விவசாய அமைச்சரான துரைராஐசிங்கம் தெரிவித்திருக்கிறாரார். இது ஒரு முட்டாள்தனமான உரையாகும்.
கரடியாறு விவசாய சேவைக்கால பயிற்சி நிலையம் எங்கள் நாட்டின் ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்பட்டது. இதனை கிழக்கு மாகாண சபையின் ஊடாக செய்தேன் என பிரச்சாரம் செய்கின்றார். இந்த பொய் பிரச்சாரத்தினை நம்ப மட்டக்களப்பான் தயாரில்லை. கரடியாறு விவசாய பண்ணையினை அம்பாறை மாவட்டத்துக்கு மாற்றுவதற்கு எடுக்கப்பட்ட முயச்சியினை தடுத்து நிறுத்தியவன் நான். யுத்தத்தில் அழிக்கப்பட்ட கரடியாறு விவசாய சேவைக்கால பயிற்சி நிலையம் புனரமைப்பதற்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியீட்டத்தினால் மேற்கொள்ளப்பட்டதே தவிர இவரது கிழக்கு மாகாண சபையில் அமைச்சின் மூலம் மேற்கொள்ளப்பட்டவையல்லை.

மாகாணசபை என்பது வெள்ளை வேட்டி கட்டுவதற்காக அமைக்கப்பட்டவையல்ல. தமிழ் மக்களின் உயிர், உடமை, அவலங்கள் என சொல்லொண்ணாத் துயரங்களுடன் கட்டியமைக்கப்பட்டவைதான் இந்த மாகாண சபை முறைமையாகும். மட்டக்களப்பு மாவட்டம் விவசாய மாவட்டமாகும். கிழக்கு மாகாண சபையில் அமைச்சராக அதுவும் விவசாய அமைச்சராக இருந்து அவர் எம் மக்களுக்காக ஒன்றுமே செய்யவில்லை. இது இந்த மாகாண சபையினை படைத்த மாவீரர்களுக்கு இவர் செய்யும் துரோகமாகும்.

போர்க்காலத்தில் இருந்து இன்று வரையும் நான் மட்டக்களப்பு மாவட்டத்தில் அரசியல் செய்யும் போது இவர் எங்கிருந்தார்?. நித்திரையால் எழும்பியவன் போல் பொய் உரையினை மக்களுக்கு புகட்ட முடியாது. மக்கள் உங்கள் நாடகத்தினை நன்கு அறிந்துள்ளார்கள்.
நான் மட்டகக்ளப்பு கல்விக் கல்லூரியினை அமைத்துள்ளேன். இதனை அமைப்பதற்கு பல தடைகள் தமிழ் கட்சிகளினால் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அப்போதைய கல்வி அமைச்சர் றிச்சேட் பத்திரண மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க ஆகியோர் எனது கோரிக்கையினை ஏற்று இதனை அமைத்தோம். இதில் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் வெளியேறியுள்ளார்கள். இதில் சில நேரம் இவரின் உறவினர்கள் கற்றிருக்கலாம் அல்லது வேலைசெய்யலாம்.
இதைப்போல் புதுக்குடியிருப்பு ஆயள்வேத வைத்தியசாலை அமைத்தேன். இதிலும் இவரின் உறவினர்கள் சிகிச்சை பெற்றிருக்கலாம். ஆனால் இவருக்கு இவைகள் அபிவிருத்தி என்று தெரியாது?, யாரால் மேற்கொள்ளப்பட்;டது என்றும் தெரியாது. இவர் மட்டக்களப்பில் தமிழ் மக்களை பிhதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதியா என கேட்கத் தோன்றுகின்றது.

தமிழர் விடுதலைக் கூட்டணியில் இருந்து ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிட்டு இந்து கலாச்சார அமைச்சராக இருந்த செல்லையா இராசதுரையினால் இசை நடனக்கல்லூரி கட்டப்பட்டது. இதற்கு பல்கலைக்கழக அந்தஸ்து வழங்கப்படவில்லை. இதனால் இம் மாணவர்களின் சான்றுதழ்கள் தகைமை அற்றதாக காணப்பட்டது. அத்துடன் வேலைவாய்ப்பினைப் பெறுவதும் கஸ்ரமாக இருந்தது. அதைப்போல் திருகோணமலை வளாகம் கிழக்கு பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்படவில்லை. இவ்வாறான பிரச்சனைகளை அவதானித்த நான்.

உயர்கல்வி அமைச்சு, இவ் அமைச்சின் செயலாளர், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் திலகரட்ண மற்றும் கிழக்கு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்களையும் ஒன்றினைத்து மகாநாடு ஒன்றை நடாத்தினேன். இதில் எடுக்கப்ட்ட தீர்மானத்துக்கமைய இசை நடனக்கல்லூரி, திருகோணமலை வளாகம் என்பன கிழக்கு பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டது. இதற்கான வர்த்தமானி அறிவித்தலை ஒரு மாத காலத்துக்குள் வெளியிடவைத்தேன். ஒவ்வாரு கிராமப் பாடசாலைக்கும் கட்டிட வசதியினை ஏற்படுத்திக் கொடுத்துள்ளேன். மட்டக்களப்பின் கல்வி அபிவிருத்திக்காக என்ன செய்தேன் என்பது தெரியாமல் அரசியலுக்கு வந்து எதனையும் கதைக்கலாம் என நினைக்கக் கூடாது.

பயங்கரவாத தடைச்சட்டம் யாரின் சம்மதத்துடன் கொண்டு வரப்பட்டது என்பது துரைராஜசிங்கத்துக்கு தெரியாது. தற்போது எதிர்கட்சியாக இருப்பது போல் முன்னர் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் எதிர்கட்சித் தலைவராக இருந்து அவரின் கையெழுத்துடன் முன்னாள் ஜனாதிபதி ஜெ.ஆர். ஜயவர்த்தனாவினால் கொண்டுவரப்பட்டது. சட்டத்தினை நீங்கள் உருவாக்கி தமிழ் இளைஞர்களை பலிக்காடாக்கிவிட்டு என்னிடம் இந்த கேள்வியினை கேட்கக்கூடாது.

இவ்வாறான பாரிய துரோகத்தினை தமிழ் மக்களுக்கு செய்தவர்கள் நீங்கள். ஆனால் யுத்தம் ஓய்ந்து இன்றுவரைக்கும் இச்சட்டத்தினை நீக்கமுடியவில்லை. இப்பேற்பட்ட நீங்கள் என்னிடம் அபிவிருத்தி பற்றி கேட்கின்றீர்கள். உங்களுக்கு அபிவிருத்தி என்றால் என்ன என்று வரைவிலக்கணம் தெரியுமா?
நீங்கள் செய்த ஒரோயொரு வேலை வந்தாறுமூலை பாடசாலையின் கண்காட்சி என்ற போர்வையில் மக்களின் பணத்தினை செலவிட்டது மாத்திரம்தான். எந்தவித புதிய விவசாய நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்றார்.

ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் கொண்டாடப்பட்ட பொங்கல் விழா

ஆலையடிவேம்பு பிரதேச செயலகக் கலாசார அபிவிருத்திப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாபெரும் பொங்கல் விழா – 2018 நிகழ்வு இன்று (02) காலை ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

 

பிரதேச செயலாளர் வேதநாயகம் ஜெகதீஸன் தலைமையில் தமிழர் பாரம்பரிய விழுமியங்களோடு இடம்பெற்ற குறித்த நிகழ்வுகளுக்கு ஆன்மீக அதிதியாக தம்பட்டை நித்தியானந்தா தபோவனத்தின் ஸ்தாபக குரு வணக்கத்துக்குரிய நித்தியானந்தாஜி மகராஜ் சுவாமிகள் கலந்துகொண்டு அருட் தியானம் மற்றும் ஆன்மீகப் பிரசங்கங்களை நிகழ்த்தி விழாவைச் சிறப்பித்திருந்துடன், ஆலையடிவேம்பு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் அனைவரும் கலாசார உடையணிந்து, தமது குடும்ப அங்கத்தவர்கள் மற்றும் குழந்தைகளோடு கலந்துகொண்டிருந்தனர்.

புது நெல் வைத்துக் கோலமிட்டு, வாழை, தென்னை, மாவிலைத் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த ஆலையடிவேம்பு பிரதேச செயலகக் கலாசார மண்டபத்தில் இளங்காலை சுப நேரத்தில் பொங்கல் வைத்தலுடன் பிரதேச செயலாளரால் ஆரம்பித்துவைக்கப்பட்ட நிகழ்வுகளில் தொடர்ந்து உழவுக்கு உதவும் காளைகளை மாலையிட்டு அலங்கரித்து, அவற்றுக்கு உணவூட்டி, வணங்கி வழிபட்டு, தமிழர் கலாசார உடையணிந்த உத்தியோகத்தர்கள் பயணித்த பாரம்பரியத் தொன்மைமிக்க மாட்டுவண்டிச் சவாரியும் அங்கு இடம்பெற்றிருந்தது.

வணக்கத்துக்குரிய நித்தியானந்தாஜி மகராஜ் சுவாமிகளின் வருகையைத் தொடர்ந்து மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பமான பொங்கல் விழா சிறப்புப் பூஜையை ஆலையடிவேம்பு பிரதேச செயலக வளாகத்தில் கோயில் கொண்டு அடியவர்க்கு அருள் பாலித்துக்கொண்டிருக்கும் அருள்மிகு ஸ்ரீ மஹா கணபதி ஆலய பிரதம குரு சிவஸ்ரீ நிசாந்தன் சர்மா சிறப்புற நடாத்தியிருந்தார்.

தொடர்ந்து பிரதேச செயலாளரது தலைமையுரையும், நித்தியானந்தாஜி மகராஜ் சுவாமிகளுக்கான பாத பூஜையும் அங்கு இடம்பெற்றதோடு, சுவாமிகளால் முன்னெடுக்கப்பட்ட தியான சங்கல்ப்பமும், ஆன்மீகப் பிரசங்கமும் அனைவரையும் கவர்ந்திருந்தன.

குறித்த விழா நிறைவு பெற்றதும் ஆலையடிவேம்பு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் வணக்கத்துக்குரிய நித்தியானந்தாஜி மகராஜ் சுவாமிகளின் ஆசிகளையும் அங்கு பெற்றுக்கொண்டனர்.

0

களவு செய்கின்றவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் – ஜனாதிபதி தெரிவிப்பு!

உங்களின் பணத்தை எடுத்து உங்களுக்கு எதிராக செயற்படுகின்றவர்களை நீங்கள் ஒருபோதும் தெரிவு செய்யக்கூடாது. அவ்வாறு அவர்கள் தவறாக செயற்பட்டால் அவர்களை நாங்களே விலக்கி விடுவோம். அவர்கள் எங்கள் கட்சியைச் சேர்ந்தவர்களாயினும் சரியே எல்லோருக்கும் சட்டம் ஒன்றுதான் என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனா தெரிவித்தார்.

அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக்கலாசாலை தைானத்தில் நேற்று (31) நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டுஉரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தேசிய காங்கிரசின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான அதாஉல்லாவின் தலைமையில் நடைபெற்ற இப்பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகம, வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரோ, இராஜாங்க அமைச்சர்களான ஏ.எச்.எம்.பௌசி, சிறியானி,  கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.
அங்கு அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
நான் இந்த நாட்டை கள்வர்களிடம் கொடுக்க மாட்டேன். ராஜபக்ஷ அண்டு களவு கொடுக்க இடம்கொடுத்ததைப்போன்று நான் எனது ஆட்சியில் களவுகள் இடம்பெற ஒருபோதும் இடம்கொடுக்க மாட்டேன். எனது ஆட்சிக்குள் களவு செய்ய முனைகின்ற ஐக்கிய தேசியக் கட்சியினர்களுக்கும் நான் இடம்கொடுக்க மாட்டேன். அவ்வாறானவர்களை நான் கண்டுகொண்டால் உடன் விலக்கி விடுவேன். என்னுடைய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்தவர்களும் இவ்வாறான தவறுகளைச் செய்தால் அவர்களையும் விலக்கி விடுவேன்.
இந்த நாட்டை அழிவுப் பாதைக்கு கொண்டு சென்றவர்கள் களவெடுக்கினற அரசியல்வாதிகள் தான் என்பைதை நீங்கள் மறந்து விடக்கூடாது. அவர்கள் அரசியலுக்கு வந்த பிறகு மக்களின் பணங்களை களவெடுக்க ஆரம்பித்து விடுகின்றார்கள். அதனால்தான் எமது நாட்டை ஒரு முன்னெற்றப் பாதைக்கு கொண்டு செல்ல முடியாமல் போய்விட்டது.
கள்வர்கள் இல்லாத ஒரு அரசாங்கத்தை நான் உருவாக்குவேன். அதற்காக இன்றுவரை நான் பாடுபட்டு உழைத்துக்கொண்டு வருகின்றேன். களவு எடுக்கின்றவர்களுக்கு எனது அரசாங்கத்தில் யாருக்கும் இடமே இல்லை. அவ்வாறானவர்களை நான் அடையாளம் கண்டுகொண்டால் அவர்களுக்கு எதிராக சட்டத்தை சரியாகச் செய்து வருகின்றேன்.
இங்கு பிரதேச சபைக்கு போட்டியிடுகின்றவர்கள் சரியாக தங்களின் பணிகளை மக்களுக்குச் செய்யவேண்டும். பிரதேச சபைக்கு தெரிவாகின்றவர்கள் நல்லவர்களாகவும், களவு செய்யாதவர்களாகவும் மக்களுக்கு சிறந்த சேவைகளைச் செய்பவர்களாக இருக்கவேண்டும். நாம் இந்த மக்களுக்கு நம்பிக்கையாக இருந்துகொண்டு சிறந்த சேவைகளைச் செய்யவேண்டும் என்றும் எம்  மக்களுக்கான சேவைகளை சரியாகவும், நேர்மையாகவும் செய்யவேண்டும் என்று நான் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.
அவ்வாறு செய்வோமானால் அவர்கள் மாகாண சபை என்றும், பாராளுமன்றம் என்றும் செல்வார்கள்.

எமது நாட்டில் படித்த இளைஞர்கள், யுவதிகள் இருக்கின்றார்கள் அவர்களிடம் இந்த நாட்டை நாம் பாரம் கொடுக்கவேண்டும். இந்த நாட்டை அவர்களிடம் ஒப்படைக்க நாம் முன்வரவேண்டும். படித்த இளைஞர், யுவதிகளிடமுள்ள சக்தி பாரிய சக்தியாக இருக்கின்றது. அவர்களின் சக்தியை பலம் வாய்ந்த சக்தியாக மாற்றியமைக்க நாம் ஒன்றிணையவேண்டும் என்று வேண்டிக்கொண்டார்.

இளைஞனை சுட்டுக்கொலை செய்த பொலிஸார் – கதிர்காமத்தில் பதற்றம்!

கதிர்காமத்தில் பொலிஸாரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி இளைஞன் ஒருவர் உயிரிழந்த நிலையில் அங்கு பெரும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
பொலிஸாரின் சமிக்ஞையையும் மீறி மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற இளைஞர் மீது பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்

இதனால் கோபமடைந்த அப்பகுதி மக்கள் பொலிஸார் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதையடுத்து அங்கு பரபரப்பு தோன்றியுள்ளது. இன்று காலை இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரச்சினை பூதாகாரமாக வெடிக்கு முன்னர் கலகமடக்கும் பொலிஸார் அங்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மக்களைக் கலைக்க கண்ணீர் புகை குண்டும் வீசப்பட்டுள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

லாலுவின் ஆட்கள் மிரட்டுவதாக நீதிபதி திடுக்கிடும் புகார்: இன்று தண்டனை விபரம்

மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பு அளிக்கப்பட்ட பீகார் முன்னாள் முதல்வர் லாலுபிரசாத் யாதவ் அவர்களுக்கான தண்டனை விபரம் நேற்றே அறிவிக்கவிருந்த நிலையில் இன்று திடீரென ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் தண்டனை அறிவிக்கவிருக்கும் தனக்கு லாலுவின் ஆட்களிடம் இருந்து மிரட்டல் வருவதாக நீதிபதி தெரிவித்துள்ளார்

லாலுவின் ஆட்கள் தமக்கு தொலைபேசியில் மிரட்டல் விடுப்பதாக கூறிய நீதிபதி சிவ்பால் சிங், தன்னை மிரட்டிய நபரின் பெயரையும் அவர் பேசியது என்ன என்பதையும் கூற மறுத்துவிட்டார். ஆனாலும் இந்த மிரட்டலுக்கு பயப்படாமல் சட்டத்தின் படியே தான் நடந்து கொள்வதாகவும் நீதிபதி சிவ்பால் சிங் தெரிவித்துள்ளார்.

இன்று லாலுவுக்கு தண்டனை அறிவிக்கப்படவுள்ள நிலையில் நீதிபதியே தனக்கு மிரட்டல் விடுக்கப்பட்டதாக வெளிப்படையாக கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் இன்று காலை தண்டனை விபரத்தை நீதிபதி அறிவிக்கவுள்ளதால் நீதிமன்ற வளாகத்திற்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

ரஜினிக்கு முதல்வர் பதவி சரிபட்டு வராது – பிரபல ஜோதிடர் கணிப்பு

ரஜினிகாந்த் முதல்வராக ஆசைப்பட்டால் அரசியலில் அவருக்கு பலத்த அடிகள் விழும் என பிரபல கன்னட ஜோதிடர் பிரகாஷ் அம்முன்னாய் கணித்துள்ளார்.

அரசியலுக்கு வருவதாக ரஜினிகாந்த் அறிவித்துவிட்ட நிலையில், அதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கர்நாடகாவை சேர்ந்த பிரபல ஜோதிடர் பிரகாஷ் அம்முன்னாய் ரஜினியின் அரசியல் பிரவேசம் பற்றி கூறியதாவது:

ரஜினிகாந்தின் ஒரு மகர ராசிக்காரர். சிம்ம லக்கினம் பொருந்தியவர். அவருக்கு துர்தரா யோகம் உள்ளது. அதன்படி, அவரை யாரும் எதிர்த்து நின்று வெற்றி பெற முடியாது. ஆனால், அருகில் இருப்பவர்கள் மூலம் அவருக்கு ஆபத்து ஏற்படலாம். எனவே, அவர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

அவரின் ராசிப்படி வருகிற லோக்சபா தேர்தலில் போட்டியிட்டால் 3 முதல் 5 தொகுதிகள் அவருக்கு கிடைக்கும். அவரின் ஜாதகத்தில் கால சர்ப்ப தோஷம் உள்ளது. எந்த உயரத்திற்கு சென்றாலும், அந்த தோஷம் ஒருவரை கீழே இழுத்து கொண்டு வரும். எனவே, ரஜினி தன்னை முதல்வர் வேட்பாளராக அறிவிக்கக் கூடாது. கட்சி தலைவராக மட்டுமே இருப்பது நல்லது.

ஒரு கிங் மேக்கராக இருக்க வேண்டும். அவர் கூறும் நபரையே முதல்வர் ஆக்க வேண்டும். ரஜினிகாந்தின் அரசியல் கட்சி தமிழகத்தில் மிகப் பெரும் சக்தியாக உருவெடுக்கும். அரசியலில் அவருக்கு எதிர்ப்புகள் வரும். அதை அவர் சமாளித்து வெற்றி பெறுவார்” என பிரகாஷ் அம்முன்னாய் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் நடந்து முடிந்த குஜராத் தேர்தலில், தொடக்கத்தில் காங்கிரஸ் முன்னிலையில் இருந்தாலும், 10 மணிக்கும் மேல் பாஜக முன்னிலைக்கு வந்து அங்கு ஆட்சியை பிடிக்கும் என இவர் ஏற்கனவே கணித்து கூறியிருந்தார். அவர் கூறியது படியே நடக்கவே தற்போது ஊடகங்கள் அவர் வீட்டு வாசலில் காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மாயமான மலேசியவிமானம் மீண்டும் தேடப்படுகிறது!

மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனாவில் உள்ள பீஜிங் நகருக்கு 2014-ம் ஆண்டு மார்ச் 8-ந்தேதி பயணிகள் விமானம் புறப்பட்டது. இதில் ஊழியர்கள் உள்பட 239 பயணிகள் இருந்தனர். விமானம் புறப்பட்டு சென்ற சிறிது நேரத்தில் மாயமானது.
அந்த விமானம் என்ன ஆனது என்று தெரியவில்லை. அது கடலில் விழுந்து மூழ்கி இருக்கலாம் என்று கருதப்பட்டது. விழுந்த விமானத்தை தேடும் பணி தொடர்ந்து நடந்து வந்தது.
இந்த நிலையில் தென்ஆப்பிரிக்கா அருகே விமானத்தின் உதிரிபாகம் மிதந்து வந்தது. அது மலேசிய விமானத்தின் பாகம் தான் என்பது உறுதிசெய்யப்பட்டது. ஆனாலும் விமானம் எங்கு விழுந்தது என்று இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
விமானத்தை தேடும் பணியில் ஆஸ்திரேலிய நிறுவனம் ஈடுபட்டது. விமானத்தை கண்டுபிடிக்க முடியாத நிலையில் அதுவும் தனது பணியை முடித்துக்கொண்டது.
தற்போது அமெரிக்காவை சேர்ந்த ஓசியன் இன்பினிட்டி என்ற நிறுவனத்தின் மூலம் தேடுதல் பணிகளை செய்ய மலேசியா ஏற்பாடு செய்துள்ளது. கடலில் தேடும் பணிகளை செய்வதற்காக விசே‌ஷ கப்பலை இந்த நிறுவனம் வைத்துள்ளது. அதிநவீன தொழில்நுட்பங்கள் இந்த கப்பலில் உள்ளன. அதில் ஒரு கப்பல் தேடும் பணியை மேற்கொள்ள உள்ளது.
தற்போது தென்ஆப்பிரிக்காவில் நிறுத்தப்பட்டுள்ள இந்த கப்பல் தேடும் பணிக்காக புறப்பட்டு வருகிறது. அதில் உள்ள கருவிகள் மூலம் விமானத்தை கண்டுபிடித்து விடலாம் என்று நம்புகிறார்கள்.

  • குறைந்த விலையில் பிறந்தநாள் வாழ்த்து '' திருமண வாழ்த்து'' மரண அறிவித்தல் நினைவு நாள் '' மற்றும் ஏனைய விளம்பரங்கள் '' தாமரை பக்கத்தில் செய்ய உடன் அழையுங்கள் +94752017793
close