விஜய் சேதுபதி படத்தில் இணையும் மூன்று இசையமைப்பாளர்கள்

விஜய் சேதுபதி நடித்து வரும் ‘மாமனிதன்’ படத்திற்காக இசையமைப்பாளர்கள் இளையராஜா, கார்த்திக் ராஜா, யுவன் ஷங்கர் ராஜா ஆகியோர் இணையவுள்ளனர்.

இசைஞானி இளையராஜாவிற்கு பத்மவிபூஷன் விருது அறிவிக்கபட்டுள்ளதால் அவருக்கு தற்போது வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. இந்நிலையில் இளையராஜா குடும்பத்தில் உள்ள மூன்று இசையமைப்பாளர்கள் – யுவன், கார்த்திக் ராஜா, இளையராஜா ஆகியோர் ஒரே படத்தில் பணியாற்றவுள்ளனர் என அறிவிப்பு வெளிவந்துள்ளது.

சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் ‘மாமனிதன்’ படத்திற்காக அவர்கள் மூன்று பேரும் இணைந்து இசையமைக்கவுள்ளனர். படம் யுவன் ஷங்கர் ராஜாவின் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

News Reporter

Leave a Reply

Your email address will not be published.

  • குறைந்த விலையில் பிறந்தநாள் வாழ்த்து '' திருமண வாழ்த்து'' மரண அறிவித்தல் நினைவு நாள் '' மற்றும் ஏனைய விளம்பரங்கள் '' தாமரை பக்கத்தில் செய்ய உடன் அழையுங்கள் +94752017793
close