மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தீ விபத்தா? சதியா? ஹெச் ராஜா!

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நடந்தது தீ விபத்து அல்லது சதியா என்று பாஜக தேசிய செய்தி தொடர்பாளர் ஹெச். ராஜா சந்தேகம் எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவரது டுவிட்டரில் பதித்துள்ள ஹெச். ராஜா ” ‘மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ஆயிரம் கால் மண்டபம் மேற்கூரை பாதிக்கப்பட்டுள்ளது என்று செய்திகள் வருகின்றன. இது விபத்து சதியா என கண்டறியப்பட்டது பாரபட்சமற்ற விசாரணை தேவை. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் இன்னமும் ஏன் மதுரை செல்லவில்லை என்பது அரசின் மெத்தனப் போக்கை காட்டுகிறது.

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கிழக்கு வாயில் பகுதியில் கோயில் கட்டிடம் 7000 சதுர அடி பரப்பளவில் பாதிக்கப்பட்டிருக்கிறது என்று மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். மீதி பகுதிகள் பற்றி ஆய்வு தேவை. இந்து அறமற்ற துறையின் அவளத்திற்கு எடுத்துக்காட்டு ” என்று பதிவிட்டுள்ளார். மீனாட்சி அம்மன் கோயில் கிழக்கு கோபுர வளாகத்தில் உள்ள கடை ஒன்றில் நேற்று இரவு ஏற்பட்ட தீ அருகில் இருந்த கடைகளுக்கும் பரவிதாக செய்தி வெளியானது. இதில், 35 கடைகள்கருகியதாக மாவட்டக் கலெக்டர் வீரராக ராவ் அறிவித்தார். தீ விபத்து ஏற்பட்டுள்ள பகுதிக்கு மேல்புறையிலிருந்து கற்கள் பெயர்ந்து விழுவதால் அதன் உறுதி தன்மை உறுதி செய்ய வருவாய் மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த நிலை ஹெச். ராஜா இந்த பதிவை வெளியிட்டுள்ளார்.

News Reporter

Leave a Reply

Your email address will not be published.

  • குறைந்த விலையில் பிறந்தநாள் வாழ்த்து '' திருமண வாழ்த்து'' மரண அறிவித்தல் நினைவு நாள் '' மற்றும் ஏனைய விளம்பரங்கள் '' தாமரை பக்கத்தில் செய்ய உடன் அழையுங்கள் +94752017793
close