சூடுபிடித்தது சினிமா அரசியல்: விஜய்யா? ரஜினியா?

ரஜினியின் அதிரடி அரசியல் நடவடிக்கையைத் தொடர்ந்து தற்போது விஜய்யும் அரசியல் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்களை வைத்திருக்கும் நடிகர்களில் விஜய்யும் முக்கியமானவர். இவருக்கும் உலகம் முழுவதும் ரசிகர்கள் பட்டாளங்கள் இருக்கிறது. விஜய் திரைத்துறையிலும் வெற்றிகரமாக சுழன்று வந்தாலும், இவருக்குள்ளும் அரசியல் எண்ணம் சுழன்றுடன் தான் இருக்கிறது.

பல ஆண்டுகளுக்கு முன்பாகவே எந்தவித அரசியல் அறிவிப்பும் இன்றி தனது அரசியல் வேலைகளை தந்திரமாக சிறிதுமாக செய்ய ஆரம்பித்து விட்டார். அதன் முதல் நடவடிக்கையாக தனது ரசிகர் மன்றத்தை விஜய் மக்கள் இயக்கமாக மாற்றினார்.இதன் மூலம் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் செய்து வந்தார். தொடர்ந்து நலத்திட்ட உதவிகள் செய்து வந்த விஜய்க்கு அரசியல் திருப்பு முனையை உருவாக்கிய படம் தலைவா. இந்த படத்தில், அரசியல் வசனங்களுக்குப் பதிலாக டைம் டூ லீடு (டைம் டு லீட்) என்ற வாசகத்தை இடம் பெறச் செய்தார். இதன் காரணமாக இந்த படத்திற்கு தமிழகத்தில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. அப்போது, ​​தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவை சந்திக்க கொடநாடு செல்ல திட்டமிட்டார். ஆனால், ஜெயலலிதா நேரம் ஒதுக்காததால், கோயம்பத்தூர் வரை சென்று பின் சென்னை திரும்பினார்.

News Reporter

Leave a Reply

Your email address will not be published.

  • குறைந்த விலையில் பிறந்தநாள் வாழ்த்து '' திருமண வாழ்த்து'' மரண அறிவித்தல் நினைவு நாள் '' மற்றும் ஏனைய விளம்பரங்கள் '' தாமரை பக்கத்தில் செய்ய உடன் அழையுங்கள் +94752017793
close