எக்குத்தப்பா எகிறிய ஆடுகளம், பீதியில்  பேட்ஸ்மேன்: மூன்றாவது டெஸ்ட்  தொடருமா?

இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் போட்டியின் நான்காவது நாள் ஆட்டம் போலவே தொடரும் என அம்பையர்கள் உத்தியோகபூர்வமாக அறிவித்தனர்.

தென் ஆப்ரிக்கா சென்று இந்திய அணி, முதல் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் இரண்டு டெஸ்டிலும் தென்னாப்பிரிக்க அணி வென்றது. மூன்றாவது டெஸ்ட் ஜோகன்ஸ்பர்க்கின் வாண்டரர்ஸ் மைதானத்தில் நடக்கிறது.இதில் தென் ஆப்ரிக்காவின் மற்ற ஆடுகளத்தை போலவே, இதிலும் பவுலரின் ஆதிக்கமே அதிகமாக இருந்தது. முதல் இன்னிங்க்ஸ் இந்திய அணி 187 ரன்கள், தென் ஆப்ரிக்கா 194 ரன்கள் எடுத்து. இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி 247 ரன்கள் ஆல் அவுட்டானது. இதன் மூலம் தென்னாப்பிரிக்க அணிக்கு 241 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது.

எகிறிய ஆடுகளம்:

வாண்டரர்ஸ் ஆடுகளம் போட்டி துவங்கிய முதல் நாள் முதலே பச்சையாக புற்களுடன் காணப்பட்டது. எனவே வழக்கத்தை விட பந்து எகிறி பேட்ஸ்மேன்களின் கை, மூஞ்சி என பதம்பார்த்தது.

இதனால் பேட்ஸ்மேன்கள் நடுங்கினர். தென் ஆப்ரிக்கா அணி இரண்டாம் இன்னிங்ஸ் இல் 1 விக்கெட்க்கு 17 ரன்கள் எடுத்த போது, ​​துவக்க எல்கர்கரின் நடுநெத்தியில் பும்ரா பவுன்சர் போட்டதில் , வீரர்களின் பாதுகாப்பு கருதி, மூன்றாவது நாள் ஆட்டம் முன்னதாகவே முடிக்கப்பட்டது.

News Reporter

Leave a Reply

Your email address will not be published.

  • குறைந்த விலையில் பிறந்தநாள் வாழ்த்து '' திருமண வாழ்த்து'' மரண அறிவித்தல் நினைவு நாள் '' மற்றும் ஏனைய விளம்பரங்கள் '' தாமரை பக்கத்தில் செய்ய உடன் அழையுங்கள் +94752017793
close