பென் ஸ்டோக்ஸ் க்கு அடித்த ஜாக்பாட் ஏலத்தில் எடுத்த ராஜஸ்தான்!

இந்த ஆண்டுக்கான ஐபிஎல்., கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலத்தில் இங்கிலாந்து ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் ரூபாய் 12.50 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார். இந்தியாவில் கடந்த 2008 முதல் உள்ளூர் டி -20 கிரிக்கெட் தொடரில் இந்தியன் பிரிமியர் லீக் (ஐபிஎல்.,) நடக்கிறது. இது வெற்றிகரமாக 11 வது ஆண்டு அடி எடுத்து வைக்கவுள்ளது.

இந்த ஆண்டு சுமார் 2 ஆண்டு தடைக்கு பின் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பங்கேற்கவுள்ளது. அதில் சென்னை அணி, தங்களின் ஆஸ்தான வீரர்களான தோனி, ரெய்னா, ரவிந்திர ஜடேஜா ஆகியோர் தக்க வைத்தது.இந்த நிலைக்கு இந்த ஆண்டுக்கான வீரர்கள் ஏலத்தில் இங்கிலாந்து ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ்க்கு எதிர்பார்த்தது போல் கடுமையான போட்டி நிலவியது. இவரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ரூ. 12.50 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. அவன் கடந்த முறை நடந்த ஏலத்தில் ரூ. 14 கோடிக்கு புனே அணி வாங்கியது.

News Reporter

Leave a Reply

Your email address will not be published.

  • குறைந்த விலையில் பிறந்தநாள் வாழ்த்து '' திருமண வாழ்த்து'' மரண அறிவித்தல் நினைவு நாள் '' மற்றும் ஏனைய விளம்பரங்கள் '' தாமரை பக்கத்தில் செய்ய உடன் அழையுங்கள் +94752017793
close