பாலியல் புகாரில் சிக்கிய பிரபலமான WWE வீரர் இடைநீக்கம் !!

WWE என்றழைக்கப்படும் மல்யுத்த நிறுவனம், பிரபலமான வீரர் என்சோ அமோர். அவர் மீது சுமத்தப்பட்ட பாலியல் புகாரின் காரணமாக அவரை அந்நிறுவனம் இடைநீக்கம் செய்துள்ளது.

WWE என்றழைக்கப்படும் மல்யுத்த நிறுவனம், மல்யுத்தப் போட்டிகளுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். கற்பனைக்கு எட்டாத வகையில் மல்யுத்தப் போட்டிகளை வழங்குவதே இந்த நிறுவனத்தின் மிகப்பெரிய வெற்றி .

இந்த நிலையில், இந்த நிறுவனத்தில் பிரபல வீரராக இருக்கும் என்சோ அமோர் மீது பெண் ஒருவர் பாலியல் புகார் ஒன்றை வைத்திருக்கிறார். அதில், கடந்த அக்டோபர் மாதம் என்சோ அமோரும் அவரது இரு நண்பர்களும் அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக சமூக வலைத்தளங்களில் பதிவிடப்பட்டுள்ளது.

இதற்கிடையில், WWE நிறுவனம் அவரை இடைநீக்கம் செய்துள்ளது. மேலும், இது போன்ற செயல்களை எப்போதும் WWE அனுமதிக்காது என்று கூறியுள்ளது. இப்புகார் நிரூபிக்கப்பட்டால், அவர் நிறுவனத்திலிருந்து நிரந்தரமாக நீக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

News Reporter

Leave a Reply

Your email address will not be published.

  • குறைந்த விலையில் பிறந்தநாள் வாழ்த்து '' திருமண வாழ்த்து'' மரண அறிவித்தல் நினைவு நாள் '' மற்றும் ஏனைய விளம்பரங்கள் '' தாமரை பக்கத்தில் செய்ய உடன் அழையுங்கள் +94752017793
close