பள்ளி குழந்தைகளை கொல்ல குடிநீரில் விஷம் கலந்த கொடூரன்

நாகையில் உள்ள ஒரு பள்ளியில் குழந்தைகள் குடிக்கும் குடிநீர் தொட்டியில் விஷம் கலக்கப்பட்டிருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே மருதூரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 40க்கும் மேற்பட்ட அதிகமான குழந்தைகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் குழந்தைகளின் பயன்பாட்டிற்காக 1000லிட்டர் சிமெண்ட் தொட்டி உள்ளது.

இந்த தொட்டியில் சிலர் விஷம் கலந்துள்ளனர். இன்று காலை பள்ளியை சுத்தம் செய்ய வந்த பெண் தண்ணீரை திறந்து பார்த்தபோது, வெள்ளை நிறமாக வந்துள்ளது. அதோடு மருந்து வடை வந்ததால், தலைமை ஆசிரியருக்கு போன் செய்துள்ளார். இதற்குள் காட்டு தீ போல் பரவ பள்ளியில் கூட்டம் கூடி குழந்தைகளை கொள்ள யார் இப்படி சாதி திட்டம் செய்தது என கொந்தளித்தனர். தலைமை ஆசிரியர் போலீசில் புகார் செய்தார்.

News Reporter

Leave a Reply

Your email address will not be published.

  • குறைந்த விலையில் பிறந்தநாள் வாழ்த்து '' திருமண வாழ்த்து'' மரண அறிவித்தல் நினைவு நாள் '' மற்றும் ஏனைய விளம்பரங்கள் '' தாமரை பக்கத்தில் செய்ய உடன் அழையுங்கள் +94752017793
close