நீங்கள் விடுதலைப் புலிகள்! பல்கலைக்கழக மாணவன் மீது தாக்குதல்

வவுனியா – பம்பைமடுவில் அமைந்துள்ள யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாக மாணவன் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் நேற்று இரவு ஒன்பது மணியளவில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
வவுனியா – பம்பைமடுவில் அமைந்துள்ள யாழ். பல்கலைக்கழக மாணவர் விடுதியில் தங்கியிருந்த முதலாம் ஆண்டு பிரயோக விஞ்ஞான பீட தமிழ் மாணவன் மீது நேற்று இரவு 9.00 மணியளவில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
விடுதிக்கு வந்த இரண்டாம் ஆண்டு பிரயோக விஞ்ஞான பீட மாணவர்கள் (பெருன்பான்மை இனத்தை சேர்ந்தவர்கள்) இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் போது காயமடைந்த மாணவனை சக மாணவர்கள் இணைந்து வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல முற்பட்டனர்.
எனினும், “நீங்கள் விடுதலைப் புலிகள். ஆகையால் இராணுவத்தினரின் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு பணித்துள்ளனர்.
இதன் போது பெருன்பான்மை இன மாணவர்களுக்கும், தமிழ் மாணவர்களுக்கும் இடையே கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டது.
சம்பவ இடத்திற்கு விடுதி காப்பாளர் சென்றவுடன் மாணவர்கள் கலைந்து சென்றுள்ளனர். அதன் பின்னர் அவரை அவரது நண்பர்கள் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் அனுமதித்துள்ளனர்.
தக்குதலுக்கு இலக்கான மாணவனுக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், சம்பவம் குறித்து வவுனியா வைத்தியசாலை பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News Reporter

Leave a Reply

Your email address will not be published.

  • குறைந்த விலையில் பிறந்தநாள் வாழ்த்து '' திருமண வாழ்த்து'' மரண அறிவித்தல் நினைவு நாள் '' மற்றும் ஏனைய விளம்பரங்கள் '' தாமரை பக்கத்தில் செய்ய உடன் அழையுங்கள் +94752017793
close