விரைவில் வெளியாகும் 2.0 டீஸர்: இயக்குனர் ஷங்கர்

ரஜினிகாந்த் அக்ஷய்குமார் நடிப்பில் உருவாகியுள்ள 2.0 படத்தின் டீஸர்  விரைவில் வெளியாகும் என்று இயக்குனர் ஷங்கர் தெரிவித்துள்ளார்.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், அக்ஷய்குமார் எமிஜாக்சன் ஆகியோர் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 2.0. இப்படத்தின் இசை வெளியீட்டுவிழா கடந்த ஆண்டு அக்டோபர் 27 தேதி துபாயில் நடைபெற்றது.

இசைப்புயல் எ.ஆர்.ரஹ்மான் இசையில் அணைத்து பாடல்களும் ஹிட் ஆகியுள்ளன. ஹாலிவுட் தரத்தில் 3டி தொழில்நுட்பத்தில் எடுக்கப்பட்ட பிரம்மாண்டமான இந்த படத்தின் டீஸர் எப்போது வெளியாகும் என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது

இந்தநிலையில், குடியரசு தின வாழ்த்து தெரிவித்துள்ள இயக்குனர் ஷங்கர் டீஸர் சஸ்பென்ஸை கலைத்துள்ளார். ”அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் உள்ள மாஃபிசீனில் வைத்து 2.0 படத்தின் டீஸர் பணிகள் மும்மரமாக நடக்கிறது. நிறைய கிராபிக்ஸ் காட்சிகள் கொண்ட டீஸர் தயாரானது விரைவிலேயே வெளியாகும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

News Reporter

Leave a Reply

Your email address will not be published.

  • குறைந்த விலையில் பிறந்தநாள் வாழ்த்து '' திருமண வாழ்த்து'' மரண அறிவித்தல் நினைவு நாள் '' மற்றும் ஏனைய விளம்பரங்கள் '' தாமரை பக்கத்தில் செய்ய உடன் அழையுங்கள் +94752017793
close