பெண் டாக்ஸி ஓட்டுனருக்கு முதல் பெண்மணி சாதனையாளர் விருது!

தென்னிந்தியாவின் முதலாவது பெண் டாக்சி ஓட்டுநரான, செல்விக்கு ‘முதல் ஓட்டுநர் பெண்மணி’ விருதை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கி கொளரவித்தார். இந்திய அரசின் குழந்தைகள் மற்றும் பெண்கள் மேம்பாட்டுத்துறை அமைச்சகம் ஒவ்வொரு துறையிலும் சிறந்து விளங்கும் பெண்களுக்கு ‘முதல் பெண்மணி சாதனையாளர்கள்’ விருது வழங்கி கெளரவித்து வருகிறது. அந்தவகையில் இந்தாண்டு முதல் பெண்மணி விருதுக்கு இந்தியா முழுவதும் இருந்து 112 பெண்கள் தேர்வு செய்யப்பட்டனர்.  அவர்களில் பெங்களூரைச் சேர்ந்த செல்வி என்ற பெண்ணும் ஒருவர். தென்னிந்தியாவின் முதலாவது பெண் டாக்சி ஓட்டுநரான, செல்வி தனது 14 வது வயதில் பெற்றோரால் கட்டாய திருமணம் செய்து வைத்திருந்தார். தெரியாத வயதில் கணவர் இழைத்த கொடுமை தாங்க முடியாத செல்வி, அவரது 18 வது வயதில் கணவரை பிரிந்து விட்டார். அதன் பிறகு, டாக்சி ஓட்டுநராக பணிசெய்தார், தனது வாழ்நாளில், செல்வி, இன்று சொந்தமாக டாக்சி நிறுவனம் நடத்தி வருகிறார். செல்வியின் இந்த சாதனைக்காக அவருக்கு முதல் பெண்மணி சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற விழாவில் ஜனாதிபதி ராமநாத் கோவிந்த், மற்றும் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மந்திரி மேனகா காந்தி, செல்விக்கு முதல் பெண்மணி விருது வழங்கி கெளரவித்தனர்.

News Reporter

Leave a Reply

Your email address will not be published.

  • குறைந்த விலையில் பிறந்தநாள் வாழ்த்து '' திருமண வாழ்த்து'' மரண அறிவித்தல் நினைவு நாள் '' மற்றும் ஏனைய விளம்பரங்கள் '' தாமரை பக்கத்தில் செய்ய உடன் அழையுங்கள் +94752017793
close