யாழ். இராணுவ கட்டளை தளபதியிடம் நீதிபதி மா.இளஞ்செழியன் விடுத்த கோரிக்கை!

இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் நீதிமன்றுக்கு சொந்தமான காணியினை விடுவிக்குமாறு யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் யாழ். இராணுவக் கட்டளை தளபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

யாழ்.மேல் நீதிமன்றில் நீதிபதியின் சமாதான அறையில், நீதிபதி இளஞ்செழியனை யாழ். இராணுவக் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியாராச்சி சந்தித்துப் பேசியிருந்தார்.

புத்தாண்டை முன்னிட்டு இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது நீதிபதிக்கு யாழ். இராணுவக் கட்டளை தளபதி புதுவருட வாழ்த்து தெரிவித்திருந்தார்.

இந்த சந்திப்பின் போது பருத்தித்துறையில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் நீதிமன்றுக்கு சொந்தமான இரண்டு ஏக்கர் காணி இருப்பதாக குறிப்பிட்ட நீதிபதி, அதனை விரைவில் விடுவிக்குமாறும் கோரிக்கை விடுத்திருந்தார்.

குறித்த காணியினை மீள கையளிக்கும் போது அங்கு மேல் நீதிமன்றத்தினை அமைக்க முடியும் எனவும் நீதிபதி மா.இளஞ்செழியன் சுட்டிக்காட்டியிருந்தார்.

இதனையடுத்து கருத்து தெரிவித்த, யாழ். இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியாராச்சி, “குறித்த காணியினை விடுவிக்க விரைந்து நடவடிக்கை எடுப்பதாக” உறுதியளித்துள்ளார்.

print

Comments

comments

சீனாவில் அடுக்குமாடி குடியிருப்பில் தொங்கிக்கொண்டிருந்த குழந்தையை இளைஞர் ஒருவர் காப்பாற்றிய காட்சி வைரலாகி வருகிறது. சீனாவின் மக்கள் கூட்டம் நிறைந்த
தென்னிந்தியாவின் முதலாவது பெண் டாக்சி ஓட்டுநரான, செல்விக்கு 'முதல் ஓட்டுநர் பெண்மணி' விருதை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கி கொளரவித்தார். இந்திய
டெல்லி அருகே உள்ள குறுகிராம் பகுதியை சேர்ந்த கிராம மக்கள் விமானத்தில் இருந்து விழுந்த மனித கழிவை விண்கல் என
பாகிஸ்தானுக்கு எதிரான 20-20 போட்டியில் நியூசிலாந்து வீரர் முன்றோ 1 ரன்னில் சாதனையை தவறவிட்டார். நியூசிலாந்து சென்றுள்ள பாக்கிஸ்தான் அணி 5
வீட்டில் வைத்திருந்த பணத்தை திருடிய மகனுக்கு அவனின் தாய் கொடுத்த தண்டனை மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனா ஷாயோடங் என்ற பகுதியில்

News Reporter

Leave a Reply

Your email address will not be published.

  • குறைந்த விலையில் பிறந்தநாள் வாழ்த்து '' திருமண வாழ்த்து'' மரண அறிவித்தல் நினைவு நாள் '' மற்றும் ஏனைய விளம்பரங்கள் '' தாமரை பக்கத்தில் செய்ய உடன் அழையுங்கள் +94752017793
close