:

சிங்கப்பூராக மாற்றமடையும் இலங்கை…

சிங்கப்பூராக மாற்றமடையும் இலங்கை…

சிங்கப்பூராக மாற்றமடையும் இலங்கை…

இலங்கையில் சிங்கப்பூர் போன்ற நாடுகளில் உள்ள வசதிகளைக் கொண்ட நவீன நகரமொன்றை நிர்மாணிக்கவுள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க இதனை தெரிவித்துள்ளார். அத்துடன் இந்த நகரமானது இரண்டு இலட்சம் மக்கள் வாழ்வதற்கு ஏற்ற வகையில் அமையவுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.கொழும்பு துறைமுக நகரத்தில் இடம்பெற்று வரும் வேலைத்திட்டங்களை நேற்று பிரதமர் நேரில் சென்று பார்வையிட்டிருந்தார். இந்த நிலையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.தொடர்ந்தும் கூறுகையில்,
“சீனா துறைமுக நிறுவனத்தினால் கடல் நிலத்தை நிரப்பி இன்னும் 99 வருடங்களில் இந்த இடத்தில் நகரம் ஒன்றை ஏற்படுத்துவதுடன், இரண்டு இலட்சம் மக்கள் வாழ்வதற்கு ஏற்றவகையில் மிகவும் அழகான நவீன முறையில் அந்த நகரத்தை நிர்மாணிப்போம்.
சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இருக்கும் வசதிகள் அனைத்தும் இந்த நகரத்திற்கு பெற்றுக் கொடுப்பதுடன், இது சீன துறைமுக நிறுவனத்தின் பிரதான முதலீடாகும்.
அத்துடன் 2020ஆகும் போது இந்த துறைமுக நகரத்தின் அடிப்படை வேலைத்திட்டங்கள் மற்றும் ஏனைய கட்டட வேலைகளை பூர்த்தி செய்ய இருக்கின்றோம்.
இதன் மூலம் நாங்கள் நினைத்தும் பார்க்க முடியாத நகரம் ஒன்று இங்கு அமையப்போகின்றது. இது இந்து சமுத்திரத்தின் கேந்திர நிலையத்திற்கான வேலைத்திட்டங்களில் ஒரு பகுதியாகும்” என பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.

print

Comments

comments

மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பு அளிக்கப்பட்ட பீகார் முன்னாள் முதல்வர் லாலுபிரசாத் யாதவ் அவர்களுக்கான தண்டனை விபரம்
ரஜினிகாந்த் முதல்வராக ஆசைப்பட்டால் அரசியலில் அவருக்கு பலத்த அடிகள் விழும் என பிரபல கன்னட ஜோதிடர் பிரகாஷ் அம்முன்னாய் கணித்துள்ளார்.
மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனாவில் உள்ள பீஜிங் நகருக்கு 2014-ம் ஆண்டு மார்ச் 8-ந்தேதி பயணிகள் விமானம் புறப்பட்டது.
கடந்த மூன்று நாட்களாக காணாமற்போயிருந்த இளைஞன் வயல் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக மானிப்பாய் பொலிசார் தெரிவித்தனர். குறித்த இளைஞர் இன்று
இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் நீதிமன்றுக்கு சொந்தமான காணியினை விடுவிக்குமாறு யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் யாழ். இராணுவக் கட்டளை

sutharshini

Related Posts

ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த பிரதேச கலை இலக்கிய விழா

Comments Off on ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த பிரதேச கலை இலக்கிய விழா

leave a comment

Create Account



Log In Your Account



  • குறைந்த விலையில் பிறந்தநாள் வாழ்த்து '' திருமண வாழ்த்து'' மரண அறிவித்தல் நினைவு நாள் '' மற்றும் ஏனைய விளம்பரங்கள் '' தாமரை பக்கத்தில் செய்ய உடன் அழையுங்கள் +94752017793
close