:

தேசிய ரீதியில் பௌதிக விஞ்ஞான (கணித) பிரிவில் முதலிடம் பெற்ற மாணவன் இதனை தொடர்ந்து வட மாகாண ஆளுநர் வாழ்த்தினார்.

தேசிய ரீதியில் பௌதிக விஞ்ஞான (கணித) பிரிவில் முதலிடம் பெற்ற மாணவன்  இதனை தொடர்ந்து  வட மாகாண ஆளுநர் வாழ்த்தினார்.

தேசிய ரீதியில் பௌதிக விஞ்ஞான (கணித) பிரிவில் முதலிடம் பெற்ற மாணவன் இதனை தொடர்ந்து வட மாகாண ஆளுநர் வாழ்த்தினார்.

தேசிய ரீதியில் பௌதிக விஞ்ஞான (கணித) பிரிவில் முதலிடம் பெற்ற மாணவன் யாழ் ஹாட்லி கல்லூரி மாணவன் ஸ்ரீதரன் துவாரகனை வட மாகாண ஆளுநர் பருத்தித்துறை புத்தலை அமைந்துள்ள அரவது வீட்டிற்கு நேரடியாக சென்று வாழ்த்தினார்.
டிசம்பர் 30.2017
தேசிய ரீதியில் பௌதிக விஞ்ஞான (கணித) பிரிவில் முதலிடம் பெற்ற மாணவன் யாழ் ஹாட்லி கல்லூரி மாணவன் ஸ்ரீதரன் துவாரகனை வட மாகாண ஆளுநர் பருத்தித்துறை புத்தலை அமைந்துள்ள அரவது வீட்டிற்கு நேரடியாக சென்று வாழ்த்தினார்.
நேற்று (29.12.2017) முற்பகல் 10.45 மணியளவில் அவரது வீட்டிற்கு சென்ற ஆளுநர் பத்தாயிரம் ரூபாய் பெறுமதியான காசோலையினையும் குறித்த மாணவனுக்கு வழங்கி கௌரவித்தார்.
தேசிய ரீதியில் முதலிடம் பெற்றுள்ள இந்த மாணவன் மேலும் முன்னேறி இந்த நாட்டிற்கும் அவரது குடும்பத்திற்கும் சேவையாற்ற வேண்டும் என இச்சந்தர்ப்பத்தில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றேன்.
முன்னொரு காலம் கல்வியில் சிறந்து விளங்கிய யாழ் குடாநாடு சிறிது காலம் கல்வியில் பின்தங்கிய நிலையில் இருந்து வந்தது. எனினும் தற்போது யுத்தம் முடிவடைந்த பின்னர் இந்த மாணவன் தேசிய ரீதியில் முதலாம் இடத்தினை பெற்றுள்ளமை மீண்டும் கல்வியில் வடமாகாணம் முன்னேறி வருகின்றது என்ற செய்தியினை வெளிகாட்டி நிற்கின்றது.


இங்கே கல்வியில் முதலிடம் பெறுபவர்கள் பல உயர்பதவிகளை அடைந்து வெளிநாடுகளுக்கு சென்று சேவையாற்றி வருகின்றார்கள். மருத்துவத்துறையில் சிறந்து விளங்குபவர்கள் தமிழ் மருத்துவர்களே ஆனால் அவர்களில் ஒருசிலர் தமது சேவையினை தாய் நாட்டிற்கு வழங்குவது கிடையாது. தாம் பிறந்த ஊருக்கு வழங்குவது கிடையாது வேறு பகுதிகளில் சேவையாற்றுகின்றார்கள். எனவே இந்த மாணவனை போன்று கல்வியில் உயர்நிலை அடைபவர்கள் படித்து மேலே வந்து தமது பெற்றோர்களுக்கும் இந்த நாட்டிற்கும் சேவை ஆற்றவேண்டும் என வேண்டிக்கொள்வாக குறிப்பிட்டார்.
யாழ் குடாநாடு மீண்டும் கல்வியில் உயர்ந்து இருப்பது தமக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும் ஏனைய மாணவர்களும் இவரைபோன்று கல்வியில் அதிகளவில் அக்கறை செலுத்துமாறும் வேண்டிக்கொண்டார்.
இவ்விஜயத்தின்போது ஆளுநருடன் ஆளுநரின் செயலர் எல்.இளங்கோவன், உதவிச் செயலாள் ஏக்ஸ்.செல்வநாயகம், வடமராட்சி வலய கல்விப் பணிப்பாளர் எஸ்.நந்தகுமார் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.
நன்றி

print

Comments

comments

மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பு அளிக்கப்பட்ட பீகார் முன்னாள் முதல்வர் லாலுபிரசாத் யாதவ் அவர்களுக்கான தண்டனை விபரம்
ரஜினிகாந்த் முதல்வராக ஆசைப்பட்டால் அரசியலில் அவருக்கு பலத்த அடிகள் விழும் என பிரபல கன்னட ஜோதிடர் பிரகாஷ் அம்முன்னாய் கணித்துள்ளார்.
மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனாவில் உள்ள பீஜிங் நகருக்கு 2014-ம் ஆண்டு மார்ச் 8-ந்தேதி பயணிகள் விமானம் புறப்பட்டது.
கடந்த மூன்று நாட்களாக காணாமற்போயிருந்த இளைஞன் வயல் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக மானிப்பாய் பொலிசார் தெரிவித்தனர். குறித்த இளைஞர் இன்று
இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் நீதிமன்றுக்கு சொந்தமான காணியினை விடுவிக்குமாறு யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் யாழ். இராணுவக் கட்டளை

Thamarai

Related Posts

leave a comment

Create AccountLog In Your Account  • குறைந்த விலையில் பிறந்தநாள் வாழ்த்து '' திருமண வாழ்த்து'' மரண அறிவித்தல் நினைவு நாள் '' மற்றும் ஏனைய விளம்பரங்கள் '' தாமரை பக்கத்தில் செய்ய உடன் அழையுங்கள் +94752017793
close