:

யாழில் பிடிபட்டாள் கொள்ளைக்காரி!! பகலில் போட்ட வேசம் என்ன தெரியுமா?

யாழில் பிடிபட்டாள் கொள்ளைக்காரி!! பகலில் போட்ட வேசம் என்ன தெரியுமா?

யாழில் பிடிபட்டாள் கொள்ளைக்காரி!! பகலில் போட்ட வேசம் என்ன தெரியுமா?

மானிப்பாய், வட்டுக்கோட்டை மற்றும் யாழ்ப்பாணம் பொலிஸ் பிரதேசங்களில் இடம்பெற்ற பல கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புபட்ட பெண் ஒருவரை நேற்று செவ்வாய்க்கிழமை கையும் – மெய்யுமாக
பிடித்துள்ளதாக மானிப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நாலக்க ஜெயவீர தெரிவித்தார்.
கைதானவர் 55 வயதான சங்கானையைச் சோ்ந்தவர் என பொலிஸார் கூறினர். சங்கானை – சேச் வீதி கொள்ளை, சண்டிலிப்பாய் திருட்டு, சுதுமலையில் மதகுரு ஒருவரின் வீட்டில் இடம்பெற்ற நகை, பணம் திருட்டு, வட்டுக்கோட்டை பகுதியில் உள்ள ஆசிரியர் வீட்டில் இடம்பெற்ற திருட்டு உள்ளிட்ட சம்பவங்களில் இவருக்கும் தொடர்பு உள்ளதாக பொலிஸார் கூறினர்.
வயது முதிர்ந்த தம்பதிகள் உள்ள வீடுகளுக்கு வேலை செய்வதற்கு செல்லும் இவர், அங்குள்ள நகைகள் மற்றும் பணம் தொடர்பில் திருடர்கள் மற்றும் கொள்ளையர்களுக்கு தகவல் வழங்கியதாக குற்றஞ் சாட்டப்பட்டுள்ளது. பின்னர் திருடப்படும் நகை, பணத்தில் இவர்கள் பங்கு போட்டுக்கொள்வதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் கூறினர்.
கைது செய்யப்பட்ட பெண்ணிடம் இருந்து 2 சங்கிலிகள், ஒரு மோதிரம் ஆகியன மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.
இவரை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணை மேற்கொண்டு வரும் குற்றத்தடுப்பு பொலிஸார், மல்லாகம்
நீதிமன்றின் உத்தரவிற்கு அமைய மேலும் சில நாட்கள் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளனர்.

print

Comments

comments

மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பு அளிக்கப்பட்ட பீகார் முன்னாள் முதல்வர் லாலுபிரசாத் யாதவ் அவர்களுக்கான தண்டனை விபரம்
ரஜினிகாந்த் முதல்வராக ஆசைப்பட்டால் அரசியலில் அவருக்கு பலத்த அடிகள் விழும் என பிரபல கன்னட ஜோதிடர் பிரகாஷ் அம்முன்னாய் கணித்துள்ளார்.
மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனாவில் உள்ள பீஜிங் நகருக்கு 2014-ம் ஆண்டு மார்ச் 8-ந்தேதி பயணிகள் விமானம் புறப்பட்டது.
கடந்த மூன்று நாட்களாக காணாமற்போயிருந்த இளைஞன் வயல் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக மானிப்பாய் பொலிசார் தெரிவித்தனர். குறித்த இளைஞர் இன்று
இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் நீதிமன்றுக்கு சொந்தமான காணியினை விடுவிக்குமாறு யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் யாழ். இராணுவக் கட்டளை

Thamarai

Related Posts

leave a comment

Create Account



Log In Your Account



  • குறைந்த விலையில் பிறந்தநாள் வாழ்த்து '' திருமண வாழ்த்து'' மரண அறிவித்தல் நினைவு நாள் '' மற்றும் ஏனைய விளம்பரங்கள் '' தாமரை பக்கத்தில் செய்ய உடன் அழையுங்கள் +94752017793
close