:

ஆலையடிவேம்பு பிரதேச கலைஞர்கள் கௌரவிப்பு!

ஆலையடிவேம்பு பிரதேச கலைஞர்கள் கௌரவிப்பு!

ஆலையடிவேம்பு பிரதேச கலைஞர்கள் கௌரவிப்பு!

கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் ஆலையடிவேம்பு பிரதேச செயலகமும் பிரதேச கலாசார அதிகார சபையும் இணைந்து இவ்வருடத்தின் மத்திய பகுதியில் ஏற்பாடு செய்திருந்த ‘கலைஞர் சுவதம்’ வேலைத்திட்டத்தில் பங்கெடுத்த ஆலையடிவேம்பு பிரதேச கலைஞர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ்களும் பரிசுப்பொதிகளும் வழங்கும் வைபவம் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் இன்று (22) காலை இடம்பெற்றது.

ஆலையடிவேம்பு பிரதேச கலாசார சபையின் தலைவரும் பிரதேச செயலாளருமான வி.ஜெகதீஸன் தலைமையில் இடம்பெற்ற இவ்வைபவத்தில் கலந்துகொண்ட இலக்கியம், சோதிடம், வரலாற்று ஆராய்ச்சி மற்றும் பாரம்பரிய வைத்தியத் துறைகளைச் சார்ந்த கலைஞர்கள் ஆலையடிவேம்பு பிரதேச மக்கள் மத்தியில் இலக்கிய ஆர்வத்தை அதிகப்படுத்துவற்காக முன்னெடுக்கப்படவேண்டிய காத்திரமான நடவடிக்கைகள் தொடர்பாகப் பிரதேச செயலாளருடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டனர்.

ஆலையடிவேம்பு பிரதேச செயலகக் கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி. நவப்பிரியா பிரசாந்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த குறித்த வைபவத்தில் கலாசார உத்தியோகத்தர் திருமதி. நகுலநாயகி மகேஸ்வரன் மற்றும் இந்து கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி. நிசாந்தினி தேவராஜ் ஆகியோர் கலந்துகொண்டு தமது திணைக்களங்களினால் ஆலையடிவேம்பு பிரதேச கலாசார அபிவிருத்தி தொடர்பில் எதிர்வரும் 2018 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்படவுள்ள வேலைத்திட்டங்கள் குறித்து அங்கு தெளிவுபடுத்தியிருந்தனர்.

print

Comments

comments

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் அனுசரணையுடன் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வாச்சிக்குடா கிராம சேவகர் பிரிவிலிருந்து தெரிவுசெய்யப்பட்ட
மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனாவில் உள்ள பீஜிங் நகருக்கு 2014-ம் ஆண்டு மார்ச் 8-ந்தேதி பயணிகள் விமானம் புறப்பட்டது.
கடந்த மூன்று நாட்களாக காணாமற்போயிருந்த இளைஞன் வயல் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக மானிப்பாய் பொலிசார் தெரிவித்தனர். குறித்த இளைஞர் இன்று
இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் நீதிமன்றுக்கு சொந்தமான காணியினை விடுவிக்குமாறு யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் யாழ். இராணுவக் கட்டளை
இலங்கையில் சிங்கப்பூர் போன்ற நாடுகளில் உள்ள வசதிகளைக் கொண்ட நவீன நகரமொன்றை நிர்மாணிக்கவுள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க இதனை தெரிவித்துள்ளார்.

Thamarai

Related Posts

leave a comment

Create AccountLog In Your Account  • குறைந்த விலையில் பிறந்தநாள் வாழ்த்து '' திருமண வாழ்த்து'' மரண அறிவித்தல் நினைவு நாள் '' மற்றும் ஏனைய விளம்பரங்கள் '' தாமரை பக்கத்தில் செய்ய உடன் அழையுங்கள் +94752017793
close