:

இலங்கையில் பல புதிய மாற்றங்களுடன் அறிமுகமாகும் கடவுச்சீட்டு!

இலங்கையில் பல புதிய மாற்றங்களுடன் அறிமுகமாகும் கடவுச்சீட்டு!

இலங்கையில் பல புதிய மாற்றங்களுடன் அறிமுகமாகும் கடவுச்சீட்டு!

இலங்கையில் சர்வதேச ரீதியான பல புதிய அம்சங்கள் அடங்கிய கடவுச்சீட்டு அறிமுகம் செய்யப்படவுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

சர்வதேச சிவில் விமான போக்குவரத்து அமைப்பின் தரத்தின்படி சர்வதேச அங்கீகாரம் கொண்ட புதிய கடவுச்சீட்டு அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் கட்டுப்பாட்டு ஜெனரல் எம்.என்.ரணசிங்க தெரிவித்துள்ளார்.

2018 ஆம் ஆண்டின் இறுதியில் புதிய கடவுச்சீட்டு மக்களுக்கு வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பியகம சுதந்திர வர்த்தக வலயத்தில் அமைந்துள்ள தோமஸ் டிலாரு என்ற பிரித்தானிய நிறுவனம் புதிய கடவுச்சீட்டினை அச்சிடவுள்ளது. புதிய கடவுச்சீட்டு வெளியிடுவதற்கான அறிக்கைகள் தற்போது தயாரிக்கப்பட்டு வருகின்றன.

இந்த அனைத்து மாற்றங்களுக்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக கட்டுப்பாட்டு ஜெனரல் எம்.என்.ரணசிங்க தெரிவித்துள்ளார்.

தற்போது வழங்கப்படுகின்ற கடவுச்சீட்டு பற்றிய பொதுவான தகவல்கள் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் இணையதளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

2015 ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் 10ஆம் திகதியில் இருந்து சாதாரண கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் ஐ.சி.ஏயின் தரநிலை தரத்திற்கு இணங்க ஒரு டிஜிட்டல் புகைப்படம் மற்றும் உயிரியியல் தரவுகளாக கைரேகையை திணைக்களத்திற்கு வழங்க வேண்டும்.

இந்த புகைப்படங்கள் எங்களுடைய திணைக்களத்தினால் நாடு முழுவதும் அங்கீகரிக்கப்பட்ட ஸ்டூடியோ அல்லது புகைப்பட தலைமை அலுவலகம் மற்றும் கிளை அலுவலகங்களில் இருந்து பெற்றுகொள்ள முடியும். கைரேகைகளை எங்கள் திணைக்களத்தின் பிரதான அலுவலகங்கள் மற்றும் கிளை அலுவலகங்களுக்கு விண்ணப்பதாரர்கள் வருகைத்தந்து வழங்குவது அவசியமாகும்.

கடவுச்சீட்டு தொடர்பான முக்கிய தகவல்கள்

வயது பேதம் இன்றி அனைத்து கடவுச்சீட்டு விண்ணப்பதாரர்களும் “K RV 35A”வடிவ விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டியது கட்டாயமாகும்.
16 வயதிற்கு மேற்பட்ட அனைத்து விண்ணப்பதாரர்களினதும் கைரேகை பிரதான அலுவலகம் மற்றும் கிளை அலுவலகங்களில் பெற்றுக் கொள்ளப்படுகின்றது.

வெளிநாட்டு தூதரகங்கள் ஊடாக கடவுச்சீட்டு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கை ரேகை மற்றும் டிஜிட்டல் புகைப்படம் வழங்காமல் கடவுச்சீட்டு பெற்றுக் கொள்ள முடியும்.

பெற்றோரின் கடவுச்சீட்டுக்காக பிள்ளைகளை அனுமதிப்பது இனிமேலும் செல்லுப்படியாகாது. பிள்ளைகளுக்காக தனியாக கடவுச்சீட்டு பெற்றுக் கொள்ள வேண்டும்.

60 வயதுக்கு குறைவான எந்தவொரு நபருக்கும் அவசர சான்றிதழ்கள் வெளியிடப்படாது.

கடவுச்சீட்டுக்கான புகைப்படங்களை திணைக்களத்திற்கு வழங்கும் முறை

திணைக்களத்தினால் அங்கீகரிக்கப்பட்ட புகைப்பட நிலையங்களில் உங்கள் புகைப்படத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.

உங்கள் புகைப்படங்கள், புகைப்பட நிலையங்கள் மூலம் எங்கள் திணைக்களத்தின் தரவுத்தளத்திற்கு அனுப்பப்படுகின்ற நிலையில், அங்கு ஒரு ரசீது உங்களுக்கு வழங்கப்படும். கடவுச்சீட்டு விண்ணப்பத்திற்கான அச்சிடப்பட்ட புகைப்படங்கள் தேவையில்லை.

இந்த ரசீது, கடவுச்சீட்டு விண்ணப்பம் மற்றும் பிற தேவையான ஆவணங்களுடன் திணைக்களத்தின் தலைமை அலுவலகம் அல்லது கிளை அலுவலகத்திற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

இது தொடர்பான மேலதிக தகவல்களை பெற்றுகொள்வதற்கு 1962 அல்லது 011 532 9200 / 001 532 9175 என்ற இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ள முடியும்.

இலங்கையின் குடிமக்கள் எவரும் கடவுச்சீட்டினை பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

print

Comments

comments

மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பு அளிக்கப்பட்ட பீகார் முன்னாள் முதல்வர் லாலுபிரசாத் யாதவ் அவர்களுக்கான தண்டனை விபரம்
ரஜினிகாந்த் முதல்வராக ஆசைப்பட்டால் அரசியலில் அவருக்கு பலத்த அடிகள் விழும் என பிரபல கன்னட ஜோதிடர் பிரகாஷ் அம்முன்னாய் கணித்துள்ளார்.
மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனாவில் உள்ள பீஜிங் நகருக்கு 2014-ம் ஆண்டு மார்ச் 8-ந்தேதி பயணிகள் விமானம் புறப்பட்டது.
கடந்த மூன்று நாட்களாக காணாமற்போயிருந்த இளைஞன் வயல் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக மானிப்பாய் பொலிசார் தெரிவித்தனர். குறித்த இளைஞர் இன்று
இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் நீதிமன்றுக்கு சொந்தமான காணியினை விடுவிக்குமாறு யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் யாழ். இராணுவக் கட்டளை

Thamarai

Related Posts

leave a comment

Create AccountLog In Your Account  • குறைந்த விலையில் பிறந்தநாள் வாழ்த்து '' திருமண வாழ்த்து'' மரண அறிவித்தல் நினைவு நாள் '' மற்றும் ஏனைய விளம்பரங்கள் '' தாமரை பக்கத்தில் செய்ய உடன் அழையுங்கள் +94752017793
close