:

93 உள்ளூராட்சி சபைக்கான வேட்புமனு தாக்கல் நிறைவு

93 உள்ளூராட்சி சபைகளுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வது இன்று (14) மதியம் 12 மணியுடன் நிறைவடைந்தது.

வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதன் பின்னர், அதற்கு எதிர்ப்புகளை முன்வைப்பதற்காக ஒரு மணி நேர கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதோடு, அதன் பின்னர் அங்கீகாரம் பெற்ற அரசியல் கட்சிகள் மற்றும் சுயாதீன குழுக்களின் வேட்புமனுக்கள், தெரிவத்தாட்சி அலுவலர்களால் அறிவிக்கப்படவுள்ளன.

வேட்புமனு தாக்கல் செய்ததை அடுத்து, வாகன ஊர்வலங்கள், பேரணிகள் நடாத்துவது தடை செய்யப்பட்டுள்ளதாக மேலதிக தேர்தல் ஆணையாளர் எம்.எம். மொஹமட் தெரிவித்தார்.

தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்துவது நேற்று (13) நண்பகல் 12.00 மணிக்கு நிறைவடைந்தது. இதில் 557 அரசியல் கட்சிகள் மற்றும் சுயாதீன குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல் ஆணையகம் அறிவித்துள்ளது.

ஐக்கிய தேசிய கட்சி

இன்றைய தினம், ஐக்கிய தேசியக் கட்சியினால், தெஹிவளை – கல்கிசை மாநகர சபை உள்ளிட்ட கொழும்பில் தேர்தல் இடம்பெறவுள்ள உள்ளூராட்சி சபைகள் 3 இற்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.

அத்துடன், களுத்துறை மாவட்டத்தின், 5 சபைகளுக்கும், கம்பஹா மாவட்டத்தின் 2 சபைகளுக்கும், புத்தளம் மாவட்டத்தின் வனாத்தவில்லு பிரதேச சபை, அநுராதபுர மாவட்டத்தின் கல்நேவ பிரதேச சபை மற்றும் மாத்தளை மாநகர சபை, பொலன்னறுவை மாவட்டத்தின் 4 உள்ளூராட்சி சபைகளுக்கும், அம்பாறை மாவட்டத்தில் 12 உள்ளூராட்சி சபைகளுக்கும் ஐ.தே.க. வேட்புமனு தாக்கல் செய்துள்ளது.

அத்துடன், கண்டி மாவட்டத்தின் நாவலப்பிட்டி நகர சபை, ஹட்டன் – திக்ஓயா நகர சபை மற்றும் நுவரெலியா மாநகர சபை, கேகாலை மாவட்டத்தில் தேர்தல் இடம்பெறும் கல்கமுவ பிரதேச சபை உள்ளிட்ட 7 சபைகளுக்கும் ஐ.தே.க. அதன் வேட்புமனுகளை தாக்கல் செய்துள்ளது.

பதுளை மாவட்டத்தின் பண்டாரவளை மாநகர சபை, அப்புதளை நகரசபை மற்றும் ஹல்தும்முல்ல பிரதேச சபை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலுள்ள 10 உள்ளூராட்சி சபைகள், இரத்தினபுரி மாவட்டத்தின் 8 உள்ளூராட்சி சபைகளுக்கும் ஐக்கிய தேசியக் கட்சி இன்று (14) வேட்பு மனுக்களை கையளித்தது.

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி

தெஹிவளை – கல்கிஸ்ஸை மாநகர சபை, மஹரகம, மஹரகம மற்றும் பொரலஸ்கமுவ நகரசபைகளுக்கு இன்றைய தினம் சுதந்திரக் கட்சி சார்பில் வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.

களுத்துறை மாவட்டத்தின் 5 உள்ளூர் அதிகார சபைகள், அநுராதபுர மாவட்டத்தில் கல்நேவ, மாத்தளை மாவட்டத்தின் மாத்தளை பிரதேச சபைக்காக குருநாகல் மாவட்டத்தில் கொபைகனே, கம்பஹா மாவட்டத்தில் பியகம பிரதேச சபைகளுக்கும், ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, கை சின்னத்தில் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளது.

அத்துடன், அம்பாறை மாவட்டத்தின் பதியத்தலாவ உள்ளிட்ட 12 பிரதேச சபைகள் மற்றும் நுவரெலியா மாநகர சபை மற்றும் ஹட்டன் நகர சபைகளுக்கு, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியாக வேட்புமனுக்களை தாக்கல் செய்தது.

இரத்தினபுரி மாவட்டத்தின் 8 சபைகள், அம்பாந்தோட்டை மாவட்டத்தின் 4 சபைகளுக்கு கை சின்னத்தில் சுதந்திரக் கட்சி வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளது.

மக்கள் விடுதலை முன்னணி

கம்பஹா மாவட்டத்தில் தேர்தல் இடம்பெறும் அனைத்து உள்ளூராட்சி சபைகளுக்கும் ஜே.வி.பி. இன்று (14) தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்தது.

பொதுசன முன்னணி

கம்பஹா மாவட்டத்தின் அனைத்து சபைகளுக்கும் பொதுசன முன்னணி வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளதோடு, களுத்துறை மாவட்டத்தின் பாணந்துறை நகர சபை, புத்தளம் மாவட்டத்தின் வனாத்தவில்லு, பொலன்னறுவை மாவட்டத்தின் 4 சபைகள், மாத்தளை மாநகர சபை, நாவலபிட்டிய நகர சபை ஆகியவற்றுக்கு பொதுசன முன்னணி இன்று (14) வேட்புமனு தாக்கல் செய்தது.

நுவரெலியா மாநகர சபை, ஹட்டன் – திக்ஓயா நகர சபை, அம்பாந்தோட்டை மாவட்டத்தில் தேர்தல் இடம்பெறும் 4 சபைகள் மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தின் 8 சபைகளுக்கும் பொதுசன முன்னணி தனது மொட்டு சின்னத்தில் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளது.

print

Comments

comments

மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பு அளிக்கப்பட்ட பீகார் முன்னாள் முதல்வர் லாலுபிரசாத் யாதவ் அவர்களுக்கான தண்டனை விபரம்
ரஜினிகாந்த் முதல்வராக ஆசைப்பட்டால் அரசியலில் அவருக்கு பலத்த அடிகள் விழும் என பிரபல கன்னட ஜோதிடர் பிரகாஷ் அம்முன்னாய் கணித்துள்ளார்.
மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனாவில் உள்ள பீஜிங் நகருக்கு 2014-ம் ஆண்டு மார்ச் 8-ந்தேதி பயணிகள் விமானம் புறப்பட்டது.
கடந்த மூன்று நாட்களாக காணாமற்போயிருந்த இளைஞன் வயல் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக மானிப்பாய் பொலிசார் தெரிவித்தனர். குறித்த இளைஞர் இன்று
இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் நீதிமன்றுக்கு சொந்தமான காணியினை விடுவிக்குமாறு யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் யாழ். இராணுவக் கட்டளை

Thamarai

Related Posts

leave a comment

Create AccountLog In Your Account  • குறைந்த விலையில் பிறந்தநாள் வாழ்த்து '' திருமண வாழ்த்து'' மரண அறிவித்தல் நினைவு நாள் '' மற்றும் ஏனைய விளம்பரங்கள் '' தாமரை பக்கத்தில் செய்ய உடன் அழையுங்கள் +94752017793
close