:

ஒரு பிரதேசத்தினுடைய கல்வித் தரம் உயர்வடைகின்ற போது அபிவிருத்தியும், வளர்ச்சியும் தொடர்ச்சியாக உயர்வடையும் – பொறியியலாளர் ஷிப்லி பாறுக்.

முஸ்லிம்கள் சிதறி வாழ்கின்ற, பெரும் நிலப்பரப்பினைக் கொண்ட பல்வேறு பின்தங்கிய பிரதேசங்கள் எமது சமூகத் தலைமைகளால் கண்டுகொள்ளப்படாமல் இருப்பது எமது சமூகத்திற்கான பாரிய அச்சுறுத்தலாகும். என முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு தொகுதி அமைப்பாளரும், ஸ்ரீ லங்கா ஷிபா பவுண்டேசனின் தலைவருமான பொறியியலாளர் ஷிப்லி பாறூக் தெரிவித்தார்.

பொலநறுவை மாவட்டத்தின், கட்டுவன்வில கிராமத்திலுள்ள Accis சர்வதேச பாலர் பாடசாலையின் முதலாவது வருடாந்த கலை விழாவும் பரிசளிப்பு நிகழ்வும் அண்மையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்

இக்கிராமமானது சுமார் 12 சதுர கிலோ மீற்றர் பரப்பளவிளான 1500 குடும்பங்களை உள்ளடக்கிய தனித்துவமான கலாச்சார விழுமியங்களைக் கொண்டதொரு முஸ்லிம் பிரதேசமாகும்.

இவ்வாறன முஸ்லிம் பிரதேசங்கள் எமது சமூகத்தலைமைகளால் கண்டுகொள்ளப்படாமல் தொடர்ச்சியாக புறக்கணிக்கப்பட்டு வருகின்றமையானது எமது முஸ்லிம் சமூகத்தின் எதிர்கால இருப்பிற்கு பாரியதொரு சவாலான விடயமாகவே காணப்படுகின்றது.

ஆகவே இத்தகைய பிரதேசங்கள் அபிவிருத்தி உள்ளிட்ட அனைத்து விடயங்களிலும் முன்னுரிமைப்படுத்தப்படல் வேண்டும். குறிப்பாக பௌதீக வளங்களை மாத்திரமின்றி இப்பிரதேச மாணவர்களினுடைய கல்வி வளர்ச்சியினை மேம்படுத்துவது தொடர்பாகவும் மிகவும் கரிசனையோடு செயற்பட வேண்டிய தேவைப்பாடு காணப்படுகின்றது.

ஒரு பிரதேசத்தினுடைய கல்வித் தரம் உயர்வடைகின்ற போது அப்பிரதேசத்தினுடைய அபிவிருத்தியும், வளர்ச்சியும் தொடர்ச்சியாக உயர்வடைந்துகொண்டு செல்லும்.

அந்த வகையில் கல்வியினை மேம்படுத்துவதனூடாக இவ்வாறான பிரதேசங்களை முன்னேற்றகரமான, தன்னிரைவுமிக்க பிரதேசங்களாக கட்டியெழுப்புவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளப்டல் வேண்டும்.

எனவே இப்பிரதேசத்தின் கல்வி உள்ளிட்ட அனைத்து விதமான அபிவிருத்திப் பணிகளிலும் எங்களாலான பங்களிப்புகளை தொடர்ச்சியாக வழங்கவுள்ளதோடு இவ்வாறான எமது பிரதேசங்களை மேம்படுத்துவது தொடர்பாக எமது சமூகத்தலைமைகளும் கூடிய அக்கறையுடன் செயற்பட வேண்டும் எனவும் தனது உரையில் தெரிவித்தார்.

print

Comments

comments

மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பு அளிக்கப்பட்ட பீகார் முன்னாள் முதல்வர் லாலுபிரசாத் யாதவ் அவர்களுக்கான தண்டனை விபரம்
ரஜினிகாந்த் முதல்வராக ஆசைப்பட்டால் அரசியலில் அவருக்கு பலத்த அடிகள் விழும் என பிரபல கன்னட ஜோதிடர் பிரகாஷ் அம்முன்னாய் கணித்துள்ளார்.
மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனாவில் உள்ள பீஜிங் நகருக்கு 2014-ம் ஆண்டு மார்ச் 8-ந்தேதி பயணிகள் விமானம் புறப்பட்டது.
கடந்த மூன்று நாட்களாக காணாமற்போயிருந்த இளைஞன் வயல் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக மானிப்பாய் பொலிசார் தெரிவித்தனர். குறித்த இளைஞர் இன்று
இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் நீதிமன்றுக்கு சொந்தமான காணியினை விடுவிக்குமாறு யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் யாழ். இராணுவக் கட்டளை

Thamarai

Related Posts

leave a comment

Create AccountLog In Your Account  • குறைந்த விலையில் பிறந்தநாள் வாழ்த்து '' திருமண வாழ்த்து'' மரண அறிவித்தல் நினைவு நாள் '' மற்றும் ஏனைய விளம்பரங்கள் '' தாமரை பக்கத்தில் செய்ய உடன் அழையுங்கள் +94752017793
close