பெற்ற மகளை சூடான தோசைக்கல்லில் அமர வைத்த பெண்”
 • ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் லலிதா (வயது 25). இவருடைய இரண்டாவது கணவர் பிரகாஷ். லலிதாவுக்கு முதல் கணவர் மூலம் பிறந்த 4 வயதான மகள் இருக்கிறாள். லலிதாவும், பிரகாசும் தெலுங்கானா மாநில தலைநகர் ஐதராபாத்தில் உள்ள ஒரு விடுதியில் வேலை பார்த்து வருகிறார்கள். இருவரும் அந்த சிறுமியை வெறுத்து ஒதுக்கினர். லலிதா சமையல் செய்து கொண்டிருந்தபோது, பெற்ற மகள் என்றும் பாராமல், அச்சிறுமியை சூடான தோசைக்கல்லில் தூக்கி உட்கார வைத்தார். இதனால், சிறுமிக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டது.

  அவளை குழந்தைகளுக்கான ஆதரவு மையத்துக்கு லலிதா கூட்டிச் சென்றார். சாலை ஓரத்தில் அவள் கிடந்ததாக அவர் கூறினார். ஆனால், சிறுமி சித்ரவதை செய்யப்பட்டு இருப்பது பரிசோதனையில் தெரிய வந்தது. இதையடுத்து, தெலுங்கானா குழந்தைகள் நலத்துறை அதிகாரி ஒருவரின் புகாரின்பேரில், லலிதா, பிரகாஷ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். சிறுமி மீட்கப்பட்டு, ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டாள்.

  print

  Comments

  comments

  Leave a Reply