குழப்பத்தை ஆரூடம் கூறிய பஞ்சாங்கம்!
 • இந்த ஆண்டு அதிக­மான சூறாவளி,காற்று,மழையால் தமிழகம் முழுவதும் உள்ள ஏரிகளில் தண்ணீர் நிரம்பி வழியும் என்றும், அனைத்து ஆறுகளில் வெள்ளம் ஏற்படும் என்றும் கணிக்கப்பட்டு இருக்கும் பஞ்சாங்கத்தின் பிரதி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

  ஒகிப் புயல் தமிழகத்தின் தென்மாவட்டங்களைப் புரட்டிப் போட்டுள்ளது. கனமழை, சூறாவளிக் காற்றால் கன்னியாகுமரி மாவட்டம் உருக்குலைந்துள்ளது.
  பாதிப்புக்களில் சிக்கியுள்ள குமரிமாவட்டம் இருளில் சிக்கித் தவிக்கிறது. புயல் குறித்த முன் அறிவிப்புக்களை ஒரு பக்கம் தொழில்­நுட்பங்களை வைத்து வானிலை மையம் கணித்து வருகிறது.

  மற்றொரு புறம் புயல், வெள்ளப் பாதிப்பு குறித்த பஞ்சாங்கக் குறிப்பும் சமூக வலைத் தளங்களில் வைரலாகி வருகிறது.

  சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்தப் பஞ்சாங்கம் வேலூர் மாவட்டம் ஆற்காட்டில் இருந்து கா.வெ.சீதாரா மய்யர் பஞ்சாங்கத்தை ஜோதிடர் கே.என். நாராயணமூர்த்தி வெளியிட்டு வருவதாகத் தெரிவிக்கப் படுகின்றது.

  print

  Comments

  comments

  Leave a Reply