காணாமல் போன எருமைகள், பேஸ்புக் மூலம் கண்டுபிடிப்பு.!
 • கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே வழிதவறி வந்த 2 எருமைகளின் உரிமையாளரை பேஸ்புக் மூலமாக கண்டுபிடித்த வாலிபருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது.

  பெங்களூர் அருகே உள்ளது ஒசக்கோட்டை இந்த பகுதியை சேர்ந்தவர் நாகேஷ் (29). கடந்த சில நாட்களுக்கு முன்பு தன் வீடு அருகே 2 எருமைகள் புதிதாக மேய்வதை கண்டார்.

  2 நாட்களாக ஒரே இடத்தில் மேய்வதை கண்ட நாகேஷ், அவை வழி தவறி வந்துள்ளது என்பதை கண்டறிந்தார். அதன் பின்னர் 2 எருமைகளையும் போட்டோ எடுத்து, தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டார்.

  அதில் இந்த 2 எருமைகள் யாருடையவை? உரிமையாளரை சென்று சேரும்வரை ஷேர் செய்யுங்கள் என தலைப்பு வைத்திருந்தார்.
  இதனை நாகேஷின் பேஸ்புக்கில் இருக்கும் நண்பர்கள் பலர் இதனை ஷேர் செய்து வந்தனர்.

  இந்த புகைப்படம் எருமையின் உரிமையாளர் நாராயணசாமியின் பேஸ்புக் பக்கத்திற்கும் சென்றுள்ளது. அதனை கண்டதும் அளவுக்கடந்த மகிழ்ச்சியும் சந்தோஷமும் அடைந்த அவர் உடனடியாக ஒசக்கோட்டைக்கு விரைந்து சென்றார்.

  நாகேஷிடம் சென்று 2 எருமையின் உரிமையாளர் நான்தான் என்று கூறினார். இதனையடுத்து நாகேஷ் 2 எருமைகளையும் அதன் உரிமையாளர் நாராயணசாமியிடம் ஒப்படைத்தார்.

  எருமையை பெற்று சென்ற நாராயணசாமி, நாகேஷிக்கு நன்றி தெரிவித்தார். பிறகு நாகேஷ் வழி தவறி வந்த எருமைகளை அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்து விட்டேன் என்று தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டார்.

  இந்த செயலுக்கு பேஸ்புக்கில் இருக்கும் நண்பர்கள் மற்றும் பொதுமக்கள் அவருக்கு வாழ்த்துக்களும், பாராட்டுகளும் தெரிவித்து வருகின்றனர்.
  மேலும், இந்த எருமைகளை பேஸ்புக் மூலம் அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது.

  print

  Comments

  comments

  Leave a Reply