பொதுமக்களே எச்சரிக்கை! எதிர்வரும் சில மணித்தியாலங்களில் நாடு எதிர்க்கொள்ளவுள்ள பேராபத்து!!
 • இன்று முற்பகல் 10 மணிக்கு வானிலை அவதான நிலையத்தால் சிறப்பு வானிலை அறிக்கையொன்று வௌியிடப்பட்டுள்ளது.
  எதிர்வரும் 12 மணித்தியாலங்களுக்காக விடுக்கப்பட்டுள்ள குறித்த அறிக்கையில் நாட்டில் ஏற்படவுள்ள கடும் மழை , பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
  நாட்டை அண்மித்த தாழ் வளிமண்டல குழப்பம் தற்போதைய நிலையில் கொழும்பில் இருந்து சுமார் 300 கிலோமீற்றர் தொலைவில் மேற்குப்பகுதியில் நிலைகொண்டுள்ளது.
  அது எதிர்வரும் மணித்தியாலங்களில் சூறாவளியாக வலுப்பெற்று நாட்டின் மேற்கு பகுதியின் ஊடாக வடமேல் நோக்கி பயணிக்கக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
  இதன் காரணமாக நாட்டின் , விசேடமாக தென்மேற்குப் பகுதிகளில் கடும் மழை மற்றும் விட்டு விட்டு கடும் காற்று (மணிக்கு 60-70 வரை) வீசக்கூடும் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.
  தென், சப்ரகமுவ , மத்திய , ஊவா மற்றும் மேல் மாகாணங்களில் குறித்த பகுதிகளில் (மில்லிமீற்றர் 100-150 வரை) கடும் மழை பெய்யக்கூடும்.
  இதேவேளை, நாட்டின் மேற்கு மற்றும் தென் கடற்பகுதிக்கு அப்பால் ஆழமான மற்றும் ஆழமற்ற கடற்பகுதிகளில் கடும் மழை , பலத்த காற்று மற்றும் கடற் கொந்தளிப்பு எதிர்ப்பார்க்கப்படுகிறது.
  காற்றின் வேகம் மணிக்கு 90 தொடக்கம் 100 கிலோமீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும்.
  மற்றைய கடற்பிரதேசங்களில் காற்றின் வேகம் 50 தொடக்கம் 60 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் எனவும் கடற்பிரதேசம் கொந்தளிப்புடன் காணப்படும் எனவும் குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
  இது தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு கடற்தொழிலாளர்கள் மற்றும் கடற்படை சமூகத்திடம் வானிலை அவதான நிலையம் கோரிக்கை விடுத்துள்ளது.

  print

  Comments

  comments

  Leave a Reply