ஆர்.கே.நகரில் போட்டியிடுவதா, வேண்டாமா ? :பா.ஜ., குழப்பம்
 • சென்னை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதா, வேண்டாமா என்பதை, கட்சி மேலிடம் முடிவு செய்யும்,” என, தமிழக பா.ஜ., தலைவர், தமிழிசை தெரிவித்தார்.

  ஆர்.கே.நகர் தேர்தலில், பா.ஜ. போட்டியிடுவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம், நேற்று சென்னை, பா.ஜ. அலுவலகத்தில் நடந்தது.கூட்டம் முடிந்த பின், தமிழிசை கூறியதாவது: ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிடுவதா, வேண்டாமா என்பதை, மேலிடம் முடிவு செய்யும். ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு, கட்சி மேலிடத்திற்கு தெரிவிக்கப்படும். மத்திய கமிட்டி கூடி ஆலோசித்து, முடிவை அறிவிக்கும்.

  இதில், உடனடியாக முடிவெடுக்க வேண்டிய அவசரம் இல்லை; தீர ஆலோசித்து முடிவெடுக்கலாம். போட்டியிடுவதாக இருந்தால், நட்சத்திர வேட்பாளரை நிறுத்துவோம்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

  இதன் மூலம் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதா, வேண்டாமா என பா.ஜ., கட்சி குழப்பமடைந்துள்ளதாக தெரிகிறது

  print

  Comments

  comments

  Leave a Reply