ஜனாதிபதிக்கு ஒத்துழைப்பு வழங்கத் தயார்: கூட்டு எதிரணி அறிவிப்பு!
 • ஊழல், மோசடிகளுக்கு எதிராக மக்களோடு மக்களாக இணைந்து போராடத் தயார் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்திருக்கும் நிலையில், அவரது போராட்டத்துக்கு முழு ஒத்துழைப்பையும் வழங்குவதற்கு கூட்டு எதிரணி தயாராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன இத்தகவலை வெளியிட்டார்.

  பிணைமுறி விவகாரத்தில் தொடர்புடைய அனைவரையும் அவர்களது அந்தஸ்துகளுக்கு அப்பாற்பட்டு உடனடியாகத் தண்டிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

  தம் மீதான அச்சுறுத்தல்களுக்கு ஜனாதிபதி அச்சமடையக் கூடாது என்றும் இந்த விவகாரத்தில் கூட்டு எதிரணி ஜனாதிபதிக்கு முழு ஒத்துழைப்பு வழங்கத் தயார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

  print

  Comments

  comments

  Leave a Reply