விபத்தில் இருவர் பலி ஒருவரை காணவில்லை: மஹியங்கனையில் கோரச்சம்பவம்
 • மஹியங்கனை மாபாகட பிரதேசத்தில் பயணித்த கார் மகாவலி வியானா கால்வாயினுள் குடைசாய்ந்ததில் இருவர் உயிரிழந்துள்ளதோடு ஒருவர் காணாமற் போயுள்ளார் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
  43 வயதுடைய கணவரும் மற்றும் 40 வயதுடைய அவரின் மனைவியுமே விபத்தில் உயிரிழந்துள்ளனர்.உயிரிழந்த தம்பதியரின் 17 வயதுடைய மகனே காணாமற் போயுள்ளார்.

  கண்டி – மெனிக்ஹின்ன பிரதேசத்தில் இருந்து மஹியங்கனை கந்தகெடிய பிரதேசத்திற்கு சென்று கொண்டிருந்த வேளையிலேயே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.

  சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை கழக்கமே விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். மேலும் காணாமல் போனவரை தேடும் பணிகள் இடம்பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

  print

  Comments

  comments

  Leave a Reply