9 வயதுடைய சிறுமியை துஷ்பிரயோகம் செய்த வயோதிபருக்கு கடூழியச்சிறை
 • யாழ்ப்பாணத்தில் 9 வயதான சிறுமியை துஷ்பிரயோகம் செய்த வயோதிபர் ஒருவருக்கு ஓராண்டு கடூழியச் சிறைத் தண்டனையும் 10 ஆயிரம் ரூபா தண்டப் பணமும் விதித்து யாழ்.மேல் நீதிமன்றம் தீர்பளித்துள்ளது.

  கடந்த 2013 ஆம் ஆண்டு காலப்பகுதியில் குறித்த சிறுமியை 65 வயதான வயோதிபர் ஒருவர் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் அவருக்கு எதிராக யாழ்.மேல் நீதிமன்றில் சட்டமா அதிபரால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

  இவ் வழக்கு தொடர்பான விசாரணைகளில் தாம் குறித்த துஷ்பிரயோக குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்வதாக வயோதிபர் ஏற்கொண்டதிற்கு இணங்க அவ் வயோதிபருக்கு ஓராண்டு கடூழியச் சிறைத் தண்டனையும், 10ஆயிரம் ரூபா தண்டப்பணமும் கட்டத் தவறின் ஒரு மாதகால கடூழியச் சிறையும், 50 ஆயிரம் ரூபா நஷ்ட ஈடும் கட்டத்தவறின் ஆறு மாத கால கடூழிய சிறைத் தண்டனையும் விதித்து யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தீர்ப்பளித்துள்ளார்.

  print

  Comments

  comments

  Leave a Reply