இலங்கையில் கணவன் – மனைவி கர்ப்பமான அதிசயம்!

இலங்கையின் தென்பகுதியில் உள்ள கிராமம் ஒன்றில் வினோத சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

குறித்த கிராமத்திற்கு சென்ற பெண்ணொருவர் குழந்தை இல்லாத பெண்களுக்கு கர்ப்பமாகுவதற்காக சில மருந்து வகைகளைக் கொடுத்துள்ளார்.

இவ்வாறு மருந்துகளை உட்கொண்ட பெண்கள் சிலருக்கு மூன்று மாதங்களுக்குப் பின்னர் கர்ப்பமாகுவதற்கான அறிகுறிகள் தென்பட்டன.

இந்தச் சிகிச்சைகளுக்குகாக பெண்கள் பலர் பெருந்தொகைப் பணத்தையும் குறித்த பெண்ணிடம் கொடுத்துள்ளனர்.

சிகிச்சையை மேற்கொண்ட பெண், வைத்தியர்களின் அறிவுரைகளை பெறக்கூடாது என்றும் இது தெய்வ அருளால் நடைபெறும் அதியசம் என்றும் அவர் கூறியுள்ளார்.

இவ்வாறு நீண்ட காலமாக குழந்தை இல்லாத பெண்ணொருவர் தனது கணவனுக்கு தெரிவிக்காமல் இந்தப் பெண்ணிடம் சிகிச்சை பெற்றுள்ளார்.

தனது மனைவி தினமும் உட்கொள்ளும் மருந்து குறித்து கணவன் வினவிய போது, முடக்கு வாதத்திற்காக உட்கொள்ளும் மருந்து என்றும் தெரிவித்துள்ளார்.

தனக்கும் அதிகளவில் முடக்குவாதம் உள்ளதாக கூறி மனைவியின் எதிர்ப்புக்கு மத்தியில் கணவன் இந்த மருந்தை உட்கொண்டுள்ளார்.

இரண்டு மூன்று மாதங்களின் பின்னர் கணவர் மற்றும் மனைவி ஆகிய இருவருக்கும் கர்ப்ப அறிகுறிகள் காணப்பட்டன. கணவனின் அடி வயிறும் பெரிதாகியுள்ளது.

இதுகுறித்து வினவிய போது, குறித்த பெண் வயிறு பெரிதாகும் ஹார்மோன் ஒன்று கொடுத்துள்ளதாகத் தெரியவந்ததை அடுத்து, இந்த மோசடிச் சம்பவம் குறித்து பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் பின்னர் சிகிச்சையளித்த குறித்த பெண் கைது செய்யப்பட்டதுள்ளா்.
மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்.

News Reporter

Leave a Reply

Your email address will not be published.

  • குறைந்த விலையில் பிறந்தநாள் வாழ்த்து '' திருமண வாழ்த்து'' மரண அறிவித்தல் நினைவு நாள் '' மற்றும் ஏனைய விளம்பரங்கள் '' தாமரை பக்கத்தில் செய்ய உடன் அழையுங்கள் +94752017793
close