திருகோணமலை கொலையுடன் தொடர்புடைய நபர் விளக்கமறியலில்!
 • திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மனிதக் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவரை இம்மாதம் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதவான் எம்.எச்.எம்.ஹம்ஸா நேற்று உத்தரவிட்டார்.

  கன்னியா, கிளிக்குஞ்சு மலைப் பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
  கடந்த மே மாதம் திருகோணமலைப் பகுதியில் நபரொருவரை வெட்டிக் கொலை செய்த குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் உப்புவெளி பொலிஸார் நேற்று முன்தினம் சந்தேக நபரை கைது செய்ததாக தெரிவிக்கின்றனர்.

  குறித்த சந்தேக நபரை பொலிஸார் நேற்று திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

  சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை உப்புவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

  print

  Comments

  comments

  Leave a Reply