தொலைபேசி அழைப்பினால் தடைப்பட்டு போன நீதிமன்ற நடவடிக்கைகள்!
 • இலங்கையில் தொலைபேசி அழைப்பு ஒன்றினால் நீதிமன்ற செயற்பாடுகள் தடைப்பட்ட சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.

  119 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு கிடைத்த தகவல் காரணமாக மாத்தறை தெற்கு உயர் நீதிமன்றம் மற்றும் மாத்தறை மாவட்ட நீதிமன்ற நடவடிக்கைகள் தற்காலிமாக நிறுத்துவதற்கு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

  யாரோ ஒருவர் ஏதோ ஒரு குற்றத்தை செய்வதற்காக துப்பாக்கி ஒன்றுடன் நீதிமன்றத்திற்கு வருகைத்தந்துள்ளதாக அவசர இலக்கத்திற்கு கிடைத்த அழைப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.

  இந்த தகவலை தொடர்ந்து மாத்தறை பொலிஸாரினால் நீதிமன்ற வளாகத்தில் அவசர தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனினும் எவ்வித ஆயுதமும் பொலிஸாரினால் கண்டுபிடிக்க முடியவில்லை.

  வழக்கு ஒன்றிற்கு வருகைத்தந்திருந்த நபர் ஒருவரின் இடுப்பு பகுதியில் இருந்து பாக்குவெட்டியை மாத்திரமே பொலிஸாரினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

  தேடுதல் நடவடிக்கைகளின் பின்னர் இந்த நீதிமன்றங்களில் இரண்டினதும் நடவடிக்கை காலை 11 மணியளவில் மீண்டும் ஆரம்பிப்பதற்கு நீதவான் தீர்மானித்துள்ளார்.

  print

  Comments

  comments

  Leave a Reply