விபத்தில் ஏழு வயது சிறுவன் பலி!
 • திருகோணமலை – ஹொரவபொத்தானை பிரதான வீதி மஹதிவுல்வெவ குளத்திற்கு அருகில் இன்று (10) அரச பேருந்துடன் மோதியதில் சிறுவன் உயிரிழந்துள்ளதாக மொறவெவ பொலிஸார் தெரிவித்தனர்.

  இவ்வாறு உயிரிழந்த சிறுவன் யாழ்ப்பாணம் – சாவகச்சேரி, பேசாலை பகுதியைச் சேர்ந்த நகுலன் தசுதரண் (07) என தெரியவருகின்றது.

  வவுனியாவிலிருந்து திருகோணமலை நோக்கி வந்த அரச பேருந்து, சிறுவன் வீதியை கடக்க முற்பட்ட வேளை மோதிவிட்டு சென்றுள்ளதாகவும், அதனையடுத்து மொறவெவ பொலிஸார் பஸ்ஸை நிறுத்தி சாரதியை கைது செய்துள்ளதாகவும் தெரியவருகின்றது.

  விபத்துக்குள்ளான சிறுவனின் சடலம் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

  இவ்விபத்து தொடர்பில் பஸ்ஸின் சாரதியை கைது செய்து, விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக மொறவெவ பொலிஸார் தெரிவித்தனர்.

  print

  Comments

  comments

  Leave a Reply