Thamarai News

தாமரை செய்திகள்

சொந்தமண்ணில் சொந்தமரங்களைவிதைப்போம்!

சுனாமி யுத்தத்தினால் வடகிழக்கில் சொந்த மண்ணின் சொந் மரங்கள் வகை தொகையின்றி அழிந்து போயின. இந்த நவீன காலத்தில் அவற்றில் நாட்டம் கொண்டு,
நடுகை
செய்வோம் அருகி விட்டனர். இதனைமீளுருச் செய்யும் வகையில்கிழ்க்கில் மரம்நடுவதற்கு உகந்த மாதமான கார்த்திகை மாதத்தில் தேற்றாத்தீவில் ஒரு தொகை பழவிதைகள் விதைக்கப்பட்டன.

எமது மண்ணுக்கு அதிக மழை வீழ்ச்சி தரும் மாதம் கார்த்திகை. அதனாலேயே,கார்; என்ற மழையை சுட்டுகின்ற பெயரை இம்மாதத்தின் பெயராகச் சூட்டியுள்ளோம்.

மரங்களே எமது ஆதித் தெய்வங்கள். மரங்களைவணங்குகின்ற தொன்மையான வழிபாட்டு முறையைக் கொண்ட நாம் பிறப்பு இறப்புக்களுக்கு மரங்களை நடும் மாண்பைக் கொண்டிருக்கின்றோம். ‘ஆகவேஆழுக்கொருமரம் நடுவோம் நாளுக்கொருவரம் பெறுவோம்’ஏன்பதையே மகுடவாசகமாக் கொண்டு எமக்கு முன்னோடியாக இருந்துதனதுபொழுது போக்கே மண்ணுக்குரிய அரிய மரங்களை நடும் பணிiயாகச்செய்துவரும் கா.இராசையாவின் வேண்டுகோளுக்கிணங்க அவரால் சேகரிக்கப்பட்டசுமார் 5000 க்கும் மேற்பட்ட பழ விதைகள் 4.11.2017 அன்று தேற்றாத்தீவு கடற்கரைதோறும் நடப்பட்டன.

எமது மண்ணின் பசுமையையும், எமது வருங்காலத்தலைமுறையின் வளமான வாழ்வையும் பாதுகாக்கும் இந்தப் புனிதமானகைங்கரியத்தில் தேசியகொள்கைகள் மற்றும் பொருளாதாரவிபகாரங்கள் அமைச்சில் மனிதவளப் பிரிவில் கடமை புரிபவரும் இயற்கை ஆர்வலருமான சி.தணிகசீலன் உட்பட ஆலய பரிபாலனசபையினர், விளையாட்டுக்கழகங்கள், இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் சமுகஆர்வலர்கள் பலரும் கலந்துகொண்டமைகுறிப்பிடத்தக்கதாகும்.

எமது சொந்தமண்ணில் எம்மோடு சேர்ந்தே பரிணமித்து வளர்ந்த சொந்தமரங்கள் ஏராளம் உண்டு. எமது மண்ணின் செழுமையை இற்றைவரை தக்கவைத்திருப்பவை இந்த உள்ழூர் மரங்கள்தான். அத்துடன் நின்றுவிடாமல் இங்குள்ள மக்களுக்கு அவற்றை பராமரிப்பது பற்றியும் அதன் முக்கியத்துவம் பற்றியும் இங்கு கூடிய தொண்டர்களால் மற்றவர்களுக்கு விழிப்பூட்டப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

‘வீட்டுக்கொருமரம் வளர்ப்போம்’என்பது அன்றையவாசகம், ஆளுக்கொருமரம் வளர்க்க வேண்டிய தேவை இன்று ஏற்பட்டுள்ளது. மரங்கள் இயற்கையின் கொடை. இயற்கை அன்னையின் மடியில் மலர்ந்த முதல் குழந்தைதாவரம் தானே! அவற்றைநாம் இல்லாமல் செய்யலாமா? அப்படிச் செய்தால் நன்றிகெட்டவர்கள் ஆகிவிடமாட்டோமா? வேண்டாம்,நாம் நமக்காகமட்டும் சிந்திப்பதை நிறுத்தி விட்டு உலகநலனையும், எதிர்காலச் சந்ததிகளின் தேவையையும் சேர்த்து சிந்திக்கக் கற்றுக் கொள்ளவேண்டும். இதனைத்தான் தொலைநோக்குப் பார்வைஎன்றும் பொது நலசிந்தனை என்றும் கூறுகின்றனர்.

?

Leave a Reply

Your email address will not be published.

  • குறைந்த விலையில் பிறந்தநாள் வாழ்த்து '' திருமண வாழ்த்து'' மரண அறிவித்தல் நினைவு நாள் '' மற்றும் ஏனைய விளம்பரங்கள் '' தாமரை பக்கத்தில் செய்ய உடன் அழையுங்கள் +94752017793
close