தொழிற்பயிற்சி நிலைய பெயர் மாற்றம்: இ.தொ.கா, தமிழக அரசியல் தலைவர்கள் கண்டனம்
 • ஹட்டன் தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தின் பெயர் மாற்றப்பட்டமையை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கண்டித்துள்ளது.

  கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த விடயம் தொடர்பாக கருத்து தெரிவிக்கப்பட்டது.

  இதேவேளை, ஹட்டன் தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தின் பெயரை மாற்றியமைக்கு தமிழக அரசியல் தலைவர்களும் கண்டனம் வெளியிட்டுள்ளனர்.

  மலையகத் தமிழர்களின் மாபெரும் தலைவராக விளங்கிய சௌமியமூர்த்தி தொண்டமானின் பெயர் தொழிற்பயிற்சி நிலையத்திலிருந்து மாற்றப்பட்டமை உலகத் தமிழர்களுக்கு வேதனை அளிப்பதாக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

  அமைதியை விரும்பும் மலையகத் தமிழர்களின் அமைதியை சீர்குலைக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக மாநிலக் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜீ.கே. வாசன் குறிப்பிட்டுள்ளார்.

  இலங்கையில் மலையகப் பகுதிகளில் தமிழரின் அடையாளத்தை மெல்ல மெல்ல அழிக்கின்ற உள்நோக்கம் கொண்ட சதி முயற்சி நடைபெறுகிறதோ எனும் சந்தேகம் எழுவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் கூறியுள்ளார்

  print

  Comments

  comments

  Leave a Reply