ஊத்துச்சேனை, கச்சக்கொடி சுவாமி மலையில் மட்.புனித மிக்கேல் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் இலவச மருத்துவ முகாம்.
 • மட்டக்களப்பு மாவட்டத்தின் பின்தங்கிய பிரதேசங்களான கோரளைப்பற்று தெற்கு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ஊத்துச்சேனை மற்றுமு; மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கச்சக்கொடி சுவாமிமலை ஆகிய கிராமங்களில் எதிர்வரும் 3 மற்றும் 4ஆம் திகதிகளில் நடமாடும் மருத்துவ முகாம்கள்நடைபெறவுள்ளன.

  மட்டக்கப்பு புனித மிக்கேல் கல்லூரி பழைய மாணவர் சங்கம், மைக்கல் லைற் விளையாட்டுக்கழகம் மற்றுமு; கிழக்கு மாகாண கருத்துவப் பிரதிநிதிகள் சங்கமும் இணைந்து இந்த நடமாடும் மருத்துவ முகாமை நடத்தவுள்ளனர்.

  நவம்பர் 3ஆம் திகதி ஊத்துச் சேனை மருத்துவ நிலையத்திலும், 4ஆம் திகதி கச்சக்கொடி சுவாமி மலை கிராம அபிவிருத்திச் சங்கக்கட்டத்திலும் காலை 9 மணிமுதல் மாலை வரை நடைபெறவுள்ளது.

  இந்த மருத்துவ முகாம்களில் மட்டக்களப்பின் பிரபல வைத்தியசர்கள் பங்கு கொண்டு பிரதேச மக்களின் மருத்துவப்பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்குவதுடன் மருத்துகளையும் வழங்கவுள்ளனர்.

  அத்துடன் இப்பிரதேசத்திலுள்ள மாணவர்களுக்கு பாடசாலை சீருடைகளும் பயிற்சிப் புத்தகங்கள் புத்தகப் பைகளையும் வழங்கவுள்ளனர்.

  print

  Comments

  comments

  Leave a Reply