பாய்மரப்படகொன்று இலங்கை வந்துள்ளது!
 • இந்தோனேசியக் கடற்படைக்குச் சொந்தமான பாய்மரப் படகொன்று இன்று மாலை கொழும்புத் துறைமுகத்துக்கு வந்து சேர்ந்துள்ளது.

  “பிமசுகி” என்றழைக்கப்படும் குறித்த பாய்மரப் படகை இலங்கை கடற்படையினர் சம்பிரதாயபூர்வமாக வரவேற்று மரியாதை அளித்துள்ளனர்.

  உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கை வந்துள்ள குறித்த கப்பல் மூன்று நாட்கள் வரை இலங்கையில் தரித்து நிற்கவுள்ளது.

  அக்காலப் பகுதியில் பாய்மரக்கப்பல் படைப்பிரிவினர் இலங்கைக் கடற்படையினருடன் சிநேகபூர்வ விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ளவுள்ளனர்.

  எதிர்வரும் நவம்பர் இரண்டாம் திகதி இந்தோனேசியப் பாய்மரக்கப்பல் இலங்கையிலிருந்து புறப்பட்டுச் செல்லவுள்ளது.

  print

  Comments

  comments

  Leave a Reply