திடீரென வந்த பாரிய முதலை! அச்சத்தில் மக்கள்!
 • பொலன்னறுவை – கவுடுல்ல, பின்பார பிரதேசத்தில் உள்ள வீட்டுத் தோட்டம் ஒன்றுக்குள் திடீரென வந்த பாரிய முதலையினால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

  எனினும் குறித்த முதலையை வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் பிடித்துள்ளனர்.

  சுமார் எட்டு அடி நீளமான இந்த முதலை கவுடுலு ஓயா ஆற்றில் இருந்து வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

  கிரித்தலே வனஜீவராசிகள் மற்றும் கால்நடை மருத்துவப் பிரிவின் அதிகாரிகள் மற்றும் மெதிரிகிரிய நகர வனஜீவராசிகள் அலுவலக அதிகாரிகள் இணைந்து இந்த முதலையை பிடித்துள்ளனர்.

  பிடிக்கப்பட்ட முதலை கவுடுல்ல தேசிய வனத்தில் விடுவிக்கப்பட்டுள்ளது.123

  print

  Comments

  comments

  Leave a Reply