கத்திக்குத்தில் முடிந்த குடும்ப தகராறு: ஒருவர் பலி!
 • சம்மாந்துறை பகுதியில் நேற்று மாலை சகோதரர்களுக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தில் கத்திக்குத்துக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
  60 வயது மதிக்கத்தக்க ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

  குடும்பத்தகராறு காரணமாக குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

  குறித்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் 40 வயது மதிக்கத்தக்க சம்மாந்துறை மஜீத்புரம் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

  இதன்போது உயிரிழந்த நபரின் சடலம் அம்பாறை மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

  print

  Comments

  comments

  2 thoughts on “கத்திக்குத்தில் முடிந்த குடும்ப தகராறு: ஒருவர் பலி!

  Leave a Reply