:

கத்திக்குத்தில் முடிந்த குடும்ப தகராறு: ஒருவர் பலி!

No Any widget selected for sidebar

கத்திக்குத்தில் முடிந்த குடும்ப தகராறு: ஒருவர் பலி!

சம்மாந்துறை பகுதியில் நேற்று மாலை சகோதரர்களுக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தில் கத்திக்குத்துக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளார். 60 வயது மதிக்கத்தக்க ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குடும்பத்தகராறு காரணமாக குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் 40 வயது மதிக்கத்தக்க சம்மாந்துறை மஜீத்புரம் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது உயிரிழந்த நபரின் சடலம் அம்பாறை மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Complete Reading


யாழில் தாயின் உடல் தகனம், குழந்தைகளின் உடல் நல்லடக்கம்! கண்ணீரில் யாழ்ப்பாணம்

யாழ். அரியாலையில் நஞ்சருந்தி தற்கொலை செய்துகொண்ட இளம் குடும்பப்பெண் மற்றும் அவரது 3 பிள்ளைகளின் உடல்கள் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளன. இதில் தாயின் உடல் தகனம் செய்யப்பட்டதுடன், மூன்று பிள்ளைகளின் உடல்களும் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொடுக்கல் வாங்கல் பிரச்சினை காரணமாக யாழ். அரியாலை பகுதியில் கடந்த வௌ்ளிக்கிழமை 28 வயதான இளம் தாய், தனது 4 வயதான பெண் குழந்தைக்கும், 2, 1 வயதுகளையுடைய ஆண் குழந்தைகளுக்கும் நஞ்சு கொடுத்து விட்டு தானும் தற்கொலை செய்திருந்தார்.
Complete Reading


வெளிநாடு பயணமாக இருந்த இளைஞருக்கு நேர்ந்த கதி!

மட்டக்களப்பு – வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் வெளிநாடு பயணமாக இருந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து இன்று பிற்பகல் வவுணதீவு – ஆயித்தியமலை பிரதான வீதியில், பாலக்காடு சந்தியிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிள் அதிகவேகத்துடன், உழவு இயந்திரம் ஒன்றை முந்திச்செல்ல முயன்றபோது வேகத்தினை கட்டுப்படுத்தமுடியாமல் விபத்து சம்பவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்போது படுகாயங்களுக்கு உள்ளான இருவரும் வவுணதீவு பொலிஸாரினால் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இந்த
Complete Reading


Create AccountLog In Your Account  • குறைந்த விலையில் பிறந்தநாள் வாழ்த்து '' திருமண வாழ்த்து'' மரண அறிவித்தல் நினைவு நாள் '' மற்றும் ஏனைய விளம்பரங்கள் '' தாமரை பக்கத்தில் செய்ய உடன் அழையுங்கள் +94752017793
close