மதம் மாறி திருமணம் செய்த பெண்ணுக்கு கிடைத்த தண்டனை
 • கேரளாவில் வேற்று மதத்தை சேர்ந்தவரை திருமணம் செய்ததால் முஸ்லிம் பெண்ணின் குடும்பம், சமூகத்தில் இருந்து ஒதுக்கி வைக்கப்படுவதாக தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

  கேரளா, மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த, ஜசீலா என்ற முஸ்லிம் பெண், தன் தந்தை மற்றும் குடும்பத்தினரின் அனுமதியுடன், 18ம் தேதி, கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த, டிஸ்கோ டோமி என்பவரை காதலித்து பதிவுத் திருமணம் செய்தார்.

  இதையடுத்து, ஜசீலாவின் தந்தை மற்றும் குடும்பத்தினரை, சமூகத்தில் இருந்து ஒதுக்கி வைப்பதாக, ஒரு முஸ்லிம் அமைப்பு அறிவித்தது.’ஜசீலாவின் குடும்பத்தினர், சமூகத்தில் இருந்து ஒதுக்கி வைக்கப்படுகின்றனர்.

  அவர்களுக்கு யாரும் எந்தவித உதவியும் செய்யக்கூடாது; அவரது குடும்பத்தினருடன், முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்த யாரும், எந்தவித சம்பந்தமும் செய்யக்கூடாது’ என, அறிவிக்கப்பட்டுள்ளது.

  ஜனநாயக நாட்டில் ஒரு பெண் தனக்கு தேவையான துணையை தனது குடும்ப ஒப்புதலோடு திருமணம் செய்வதற்கு கூட உரிமை இல்லாமல் இருப்பதை நினைத்தால் வேதனையளிக்கிறது என கூறப்படுகிறது.

  print

  Comments

  comments

  Leave a Reply