யாழ் துப்பாக்கிச்சூடு
 • யாழ். மணியம்தோட்டம் பகுதியில் துப்பாக்கிச்சூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு கொழும்பில் இருந்து விசேட குற்றத் தடுப்பு விசாரணை அதிகாரிகள் யாழ்ப்பாணத்திற்கு செல்லவுள்ளனர்.

  பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜெயசுந்தரவினால் நியமிக்கப்பட்ட இந்த குற்றத் தடுப்பு விசாரணை அதிகாரிகள் குழு நாளை யாழ்ப்பாணத்திற்கு செல்லவுள்ளனர்.

  கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ். மணியம் தோட்டம் உதயபுரம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் இளைஞர் மீது துப்பாக்கிச் சூட்டுப் பிரயோகம் மேற்கொண்டதில் சூட்டுக்கு இலக்காகிய டொன் போஸ்கோ ரிஸ்மன் என்ற 25 வயதுடைய இளைஞன் உயிரிழந்தார்.

  எனினும், துப்பாக்கிச் சூட்டினை மேற்கொண்டது பொலிஸார் தான் என உயிரிழந்த இளைஞருடன் வந்த நபர் தெரிவித்த போதும், எனினும் பொலிஸார் இந்த துப்பாக்கிச்சூட்டினை மேற்கொள்ளவில்லை என பொலிஸ் தரப்பு தெரிவித்திருந்தது.

  இந்த நிலையில், குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தினை யார் செய்திருக்கலாம் என்ற சந்தேகம் பொலிஸ் தரப்பில் இருந்து வருவதுடன், முப்படை மீதும் விசாரணைகளை முன்னெடுக்கும் செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

  இந்த நிலையிலேயே பொலிஸ்மா அதிபரினால் கொழும்பில் உள்ள குற்றத்தடுப்பு பொலிஸ் உயர் அதிகாரிகள் குழு நியமிக்கப்பட்டுள்ளனர்.

  இவர்கள் நாளை யாழிற்கு சென்று துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

  print

  Comments

  comments

  Leave a Reply