நீதிபதி இளஞ்செழியன் போதிதர்மர் என்கிறார் ‘மேர்வின் சில்வா
 • இந்து ஆலயங்களில் பலிப்பூஜைகளை நடத்தக் கூடாது என தீர்ப்பு வழங்கிய யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் மனிதர் அல்ல என முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

  முன்னேஸ்வர காளியம்மன் கோயிலில் நடக்கும் பலிப்பூஜைகளுக்கு எதிராக போராடி சர்ச்சைகளுக்கு உள்ளான நபர் என்ற வகையில் நீதிபதி இளஞ்செழியனின் தீர்ப்பு குறித்து கருத்து வெளியிடும் போதே மேர்வின் சில்வா இதனை கூறியுள்ளார்.

  இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

  நீதிபதி இளஞ்செழியன் ஒரு போதிதர்மர் என்று நான் நம்புகிறேன். இந்த பூலோகத்திலேயே போதிதர்மர்கள் பிறக்கின்றனர்.

  தர்மபால, முனிதாச குமாரதுங்க, வலிசிங்க ஹரிச்சந்திர, ஓல்கோட் ஆகியோர் போதிதர்மர்களை போன்றவர்கள். இவர்களை போன்ற ஒரு போதிதர்மரே இந்த நீதிபதி.

  இந்த தீர்ப்பை வழங்கிய யாழ். நீதிபதி, கையாண்ட முறையை ஏனைய நீதிபதிகளும் கையாண்டால். அந்த புண்ணியத்திலேயே சொர்க்கலோகம் செல்ல முடியும்.
  நல்ல விடயங்களை காணும் போது பொய்யான வாதங்களை முன்வைக்காது. அந்த வழியில் செல்லுமாறு நாட்டின் அரசியல்வாதிகளிடம் கோருகிறேன் என்றார்.

  print

  Comments

  comments

  Leave a Reply