:

கடலில் குளிக்கச்சென்ற இரு மாணவர்கள் மாயம்

 

முல்லைத்தீவில் அமைந்துள்ள சுற்றுலா கடற்கரை பிரதேசத்தில் நீச்சலில் ஈடுபட்ட இரண்டு மாணவர்கள் இன்று கடலில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்.

தீபாவளி நாளான இன்றையதினம் பொழுதை மகிழ்சியாக கழிக்கும் நோக்கில் நண்பர்கள் ஏழுபேர் கடலில் குளிப்பதற்காக முல்லைத்தீவு கடற்கரைக்கு சென்றுள்ளனர்.

இந்த நிலையில் கடலில் குளித்துகொண்டிருந்த சமயம் இரண்டுபேர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்.

கடற்படையினர் மற்றும் மீனவர்கள் இணைந்து தேடுதல் பணிகளை மேற்கொண்டுவருகின்றனர்.

இதில் முல்லைத்தீவு உண்ணாப்புலவை சேர்ந்த 18 வயதுடைய அன்ரனி க்லாடஸ் வினோதன் குரூஸ் மற்றும் முல்லைத்தீவு மணற்குடியிருப்பை சேர்ந்த 17 வயதுடைய அன்ரன் அமல்ராஜ் டினோஜன்ஆகிய மாணவர்களே கடலில் மூழ்கிய நிலையில் காணாமல் போயுள்ளனர்.

குறித்த சுற்றுலா கடற்கரை பிரதேசத்தில் விடுமுறை நாட்களில் இனிமையாக பொழுதை கழிக்கும் நோக்கோடு ஆயிரக்கணக்கான சுற்றுலா பிரயாணிகள் வந்து செல்லும் நிலையில் முறையான பாதுகாப்பு வசதிகள் எவையும்
ஏற்படுத்தப்படவில்லை என்பதோடு கடற்பாதுகாப்பு படை (லைஃப் கார்ட்) வசதிகள் எவையும் இதுவரையில் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது

print

Comments

comments

ரஜினிகாந்த் முதல்வராக ஆசைப்பட்டால் அரசியலில் அவருக்கு பலத்த அடிகள் விழும் என பிரபல கன்னட ஜோதிடர் பிரகாஷ் அம்முன்னாய் கணித்துள்ளார்.
மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனாவில் உள்ள பீஜிங் நகருக்கு 2014-ம் ஆண்டு மார்ச் 8-ந்தேதி பயணிகள் விமானம் புறப்பட்டது.
கடந்த மூன்று நாட்களாக காணாமற்போயிருந்த இளைஞன் வயல் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக மானிப்பாய் பொலிசார் தெரிவித்தனர். குறித்த இளைஞர் இன்று
இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் நீதிமன்றுக்கு சொந்தமான காணியினை விடுவிக்குமாறு யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் யாழ். இராணுவக் கட்டளை
இலங்கையில் சிங்கப்பூர் போன்ற நாடுகளில் உள்ள வசதிகளைக் கொண்ட நவீன நகரமொன்றை நிர்மாணிக்கவுள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க இதனை தெரிவித்துள்ளார்.

Thamarai

Related Posts

leave a comment

Create Account



Log In Your Account



  • குறைந்த விலையில் பிறந்தநாள் வாழ்த்து '' திருமண வாழ்த்து'' மரண அறிவித்தல் நினைவு நாள் '' மற்றும் ஏனைய விளம்பரங்கள் '' தாமரை பக்கத்தில் செய்ய உடன் அழையுங்கள் +94752017793
close