தலதா மாளிகைக்கு 26 கோடி செலவில் யானையொன்று கொள்வனவு!

தலதா மாளிகைக்கு 26 கோடி செலவில் யானையொன்று கொள்வனவு செய்யப்பட்ட சம்பவத்தில் பெரும் ஊழல் நடந்திருப்பதாக தனிநபர் ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 2007ஆம் ஆண்டில் மியன்மார் நாட்டில் இருந்து 26 கோடி ரூபாய் செலவில் கண்டி தலதா மாளிகைக்கு யானையொன்று கொள்வனவு செய்யப்பட்டிருந்தது. இதன் போது, கேள்விப் பத்திர நடைமுறைகளை புறம் தள்ளி யானை கொள்வனவு செய்யப்பட்டிருந்தது. திறந்த சந்தையில் ஒன்றரை கோடி ரூபாய்க்கும் குறைவாக யானையொன்றைக் கொள்வனவு செய்வதற்கான சாத்தியம் இருக்கையில் , பாரிய தொகை செலவழித்து மியன்மாரில் இருந்து யானையொன்றைத் தருவித்த சம்பவத்தில் பெரும் ஊழல் நடைபெற்றிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. சுங்கத்திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர்களில் ஒருவரான சமந்த குணசேகர என்பவர் இது தொடர்பாக…

Share Button
Read More

கொழும்பு போர்ட் சிட்டி திட்டத்திற்கு ஏற்பட்டுள்ள சிக்கல்!

கொழும்பு போர்ட் சிட்டி திட்டத்திற்கு வேலைப்பாடுகள் மிகவும் வேகமாக நடந்துவரும் நிலையில், குறித்த திட்டத்திற்கு எதிராக சர்வதேச நீதிமன்றில் வழக்கு தொடரத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா நேச்சர் குருப் என்ற சுற்றாடல் அமைப்பு ஒன்று இவ்வாறு வழக்குத் தொடரத் தீர்மானித்துள்ளது. இந்நிலையில், வழக்குத் தொடர்வது தொடர்பில் சுவிட்ஸர்லாந்து சட்ட நிறுவனமொன்றுடன் ஏற்கனவே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Share Button
Read More

மலேசியாவில் மனித முகம் கொண்ட மிருக குட்டி இருப்பதாக சமூகவலைத்தளங்களில் புகைப்படங்கள் வைரலாகின.

மலேசியாவில் மனித முகம் கொண்ட மிருக குட்டி இருப்பதாக சமூகவலைத்தளங்களில் புகைப்படங்கள் வைரலாகின. பிறந்த குழந்தை போன்ற தோலுடன் தலையில் கறுப்பு நிற முடிகளுடன் விலங்கை போன்ற முக அமைப்பு கொண்ட புகைப்படம் வெளியானது. மலேசியாவின் பகாங் பகுதியில் மிருக குட்டி இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில் இது போலியான ஒன்று என மலேசிய பொலிசார் விளக்கம் அளித்துள்ளனர். விலங்கு முக அமைப்பு கொண்ட கூர்மையான பற்கள் உடைய சிலிக்கான் பொம்மை இது என பொலிசார் தெரிவித்துள்ளனர். எப்போதும் கண்களை மூடியிருக்கும் இந்த பொம்மை, யாராவது தொட்டாலோ கைகளில் வைத்திருக்கும் போதோ ஒலி எழுப்புமாம்.

Share Button
Read More

இராணுவீரர் ஒருவர் நேற்று இரவு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முல்லைத்தீவு கேப்பாப்புலவில் 59 ஆவது படைப்பிரிவை சேர்ந்த இராணுவீரர் ஒருவர் நேற்று இரவு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த இராணுவ வீரர் கேப்பாப்புலவு இராணுவ முகாமிற்குள் உழவு இயந்திரத்தில் பயணித்துக்கொண்டிருந்த சமயம் விபத்தில் சிக்கியுள்ளதாக இராணுவத்தரப்பினர் தெரிவித்துள்ளனர். விபத்துக்குள்ளாகிய இராணுவீரரின் சடலம் பிரத பரிசோதனைக்காக முல்லைத்தீவு மாஞ்சோலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இராணுவப் பொலிஸ் பிரிவினர் மேலதிக விசாரணையில் ஈடுபட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Share Button
Read More

கடலில் குளிக்கச்சென்ற இரு மாணவர்கள் மாயம்

  முல்லைத்தீவில் அமைந்துள்ள சுற்றுலா கடற்கரை பிரதேசத்தில் நீச்சலில் ஈடுபட்ட இரண்டு மாணவர்கள் இன்று கடலில் மூழ்கி காணாமல் போயுள்ளனர். தீபாவளி நாளான இன்றையதினம் பொழுதை மகிழ்சியாக கழிக்கும் நோக்கில் நண்பர்கள் ஏழுபேர் கடலில் குளிப்பதற்காக முல்லைத்தீவு கடற்கரைக்கு சென்றுள்ளனர். இந்த நிலையில் கடலில் குளித்துகொண்டிருந்த சமயம் இரண்டுபேர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர். கடற்படையினர் மற்றும் மீனவர்கள் இணைந்து தேடுதல் பணிகளை மேற்கொண்டுவருகின்றனர். இதில் முல்லைத்தீவு உண்ணாப்புலவை சேர்ந்த 18 வயதுடைய அன்ரனி க்லாடஸ் வினோதன் குரூஸ் மற்றும் முல்லைத்தீவு மணற்குடியிருப்பை சேர்ந்த 17 வயதுடைய அன்ரன் அமல்ராஜ் டினோஜன்ஆகிய மாணவர்களே கடலில் மூழ்கிய நிலையில் காணாமல் போயுள்ளனர். குறித்த சுற்றுலா கடற்கரை பிரதேசத்தில்…

Share Button
Read More

21ம் நூற்றாண்டின் இந்துக் கட்டிடக் கலைவளர்ச்சிக்குஓர் எடுத்துக்காட்டுதேற்றாத்தீவுகொம்புச்சந்திப் பிள்ளையார் ஆலயம்

Share Button
Read More

தேற்றாத்தீவு கிராமத்தில் விவசாயிகளின் தேவையின் பொருட்டு மின் மாற்றி

(எஸ்.ஸிந்தூ) தேற்றாத்தீவு கிராமத்தில் விவசாயிகளின் தேவையின் பொருட்டு மின் மாற்றி ஒன்று தேவை என பல தடவை பொது மக்கள் அதிகாரிகளிடமும் ஊடகங்களிடமும் சுட்டிக்காட்டி இருந்தார்கள் அந்த வயைில் குறித்த பிரச்சினை தொடர்பாக ஆரயந்த பிராந்திய மின் இணைப்பு பிரிவினர் புதிய மின் மாற்றியை பொருத்துவதர்க்கான நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர்

Share Button
Read More

இலங்கையில் மிக உயரமான சுதைவிக்கிரகத்தை கொண்ட மட்டக்களப்பு

(எஸ்.ஸிந்தூ) இலங்கையில் மிக உயரமான சுதைவிக்கிரகத்தை கொண்ட மட்டக்களப்பு தேற்றாத்தீவு கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலயத்தில் நேற்று சனிக்கிழமை காலை ஆலயத்தின் பிரதம குருவும் கிழக்கிலங்கை இந்து குருமார் ஒன்றியத்தின் தலைவருமான சிவஸ்ரீ க.கு சீதாரம் குருக்கள் தலைமையில் இவ் சனிஸ்வர ஓமக்கிரிகை இடம் பெற்றன இதன் போது சனிஸவரக்கு விசேட ஸ்பனா அபிசேகமும் அதனை தொடந்து அடியார்களின் தங்கள் கைகளினால் யாக குண்டத்தில் ஆகுதிகள் ஈட்டதுடன் எள் ஏரித்து தேங்காய் வேட்டியும் புரட்டாசி சனிஸ்வர ஓமக்கிரிகையில் கலந்து வழிபட்டனர்

Share Button
Read More

சம்மாந்துறை வங்களாவடி பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்து!

அம்பாறையில் இருந்து கல்முனை நோக்கி சென்ற ஜிப் வாகனம் டயர் வெடித்ததால் விபத்து ஏற்பட்டுள்ளது இன்று மாலை 04:30 மணியளவில் புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளது

Share Button
Read More

வித்தியாவுக்கு கிடைத்த வெற்றி

நீதிபதிகளுக்குப் பாராட்டு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் புங்குடுதீவு மாணவி வித்தியா தொடர்பான வழக்குக்கு, நீதிபதிகளால் வழங்கப்பட்ட தீர்ப்பு, நீதி தேவதைக்குக் கிடைத்த பெரும் வெற்றியாகும் என்று கல்வி இராஜாங்க அமைச்சர் வீ. இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் சுழிபுரம் விக்டோரியா கல்லூரியில் 45.2 மில்லியன் ரூபா பெறுமதியான 18 வகுப்பறைகளைக் கொண்ட மூன்று மாடி கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன் போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், கடந்த காலங்களைவிட தற்போது, அரசின் தலையீடு இல்லாமல் நீதிமன்றங்கள் சுயாதீனமாக செயல்படுகின்றது. இது நல்லாட்சியின் மூலம் கிடைத்த ஒரு வெற்றியாகும். தீர்ப்பை வழங்கிய…

Share Button
Read More