வித்தியா கொலை வழக்கின் சந்தேகநபர்கள் சற்று முன் யாழ்.மேல்,
 • வித்தியா கொலை வழக்கின் சந்தேகநபர்கள் சற்று முன் யாழ்.மேல் நீதிமன்றிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
  பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினரின் பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் இவர்கள் மேல் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
  யாழ். மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பு இன்னும் சில மணி நேரங்களில் வழங்கப்பட உள்ள நிலையில் நீதிமன்றிற்கு வருகைத் தருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.
  இதனால் நீதிமன்றில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வழமைக்கு மாறாக அதிக பொலிஸாரும் அதிக பாதுகாப்பு ஏற்பாடுகளும் நீதிமன்ற வளாகத்தில் காணப்படுகின்றன.

  மூன்று நீதிபதிகள், வித்தியாவின் தாயார், 12ஆம் சந்தேகநபர் வருகை

  வித்தியா கொலை வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்படவுள்ள நிலையில், மேல் நீதிமன்ற நீதிபதிகள் மூவரும் பலத்த பாதுகாப்புடன் மன்றுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.
  அத்துடன் வித்தியாவின் தாயாரும் பொலிஸ் பாதுகாப்புடன் நீதிமன்றிற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
  இந்த நிலையில் வித்தியா கொலையில் விடுதலை செய்யப்பட்ட 12ஆவது சந்தேகநபரும் பாதுகாப்புக்கு மத்தியில் அழைத்துவரப்பட்டுள்ளார்.
  யாழ்ப்பாண நீதிமன்ற கட்டடத்தொகுதியின் 3ஆம் மாடியில் கூடும் நீதாய விசாரணை மன்றின் நீதிபதிகளா
  கடந்த ஜுன் மாதம் 28 ஆம் திகதி முதல் வித்தியா கொலை வழக்கு நீதாய விசாரணை மன்றின் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
  3 மாதங்கள் நடைபெற்ற இந்த வழக்கின் விசாரணைகள் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், வழக்கின் தீர்ப்பு இன்று அறிவிக்கப்படவுள்ளது.

  print

  Comments

  comments

  Leave a Reply