வித்தியா  வழக்கின் இறுதி தீர்ப்பு இன்று காலை வெளியாகி உள்ளது.

Share Button
Read More

மாணவி வித்தியா படுகொலை

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கு ட்ரயலட் பார் தீர்ப்பாயத்தில் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று வழக்கின் இறுதி தீர்ப்பு வழங்கப்படவுள்ளது. இது தொடர்பிலான அமர்வு மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையிலான நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் மற்றும் நீதிபதி அன்னலிங்கம் பிரேம்சங்கர் ஆகியோர் அடங்கிய குழாம் சற்று முன்னர் கூடியுள்ளது. தற்போது வவுனியா மேல் நீதிமன்றத்தின் நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் 332 பக்கங்களை கொண்ட தீர்ப்பை வாசிக்க தொடங்கியுள்ளதாக எமது பிராந்திய செய்தியார் தெரிவித்தார். இந்நிலையில், இன்னும் சற்று நேரத்தில் வழக்கின் தீர்ப்பு வழங்கப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

Share Button
Read More

வித்தியா கொலை வழக்கின் சந்தேகநபர்கள் சற்று முன் யாழ்.மேல்,

வித்தியா கொலை வழக்கின் சந்தேகநபர்கள் சற்று முன் யாழ்.மேல் நீதிமன்றிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினரின் பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் இவர்கள் மேல் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். யாழ். மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பு இன்னும் சில மணி நேரங்களில் வழங்கப்பட உள்ள நிலையில் நீதிமன்றிற்கு வருகைத் தருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் நீதிமன்றில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வழமைக்கு மாறாக அதிக பொலிஸாரும் அதிக பாதுகாப்பு ஏற்பாடுகளும் நீதிமன்ற வளாகத்தில் காணப்படுகின்றன. மூன்று நீதிபதிகள், வித்தியாவின் தாயார், 12ஆம் சந்தேகநபர் வருகை வித்தியா கொலை வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்படவுள்ள நிலையில், மேல் நீதிமன்ற…

Share Button
Read More