யாழில் துரத்தி துரத்தி வாள்வெட்டு




  • யாழ். தென்மராட்சி கெருடாவில் பகுதியில் இடம்பெற்ற வாள் வெட்டு தாக்குதல் சம்பவத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
    இந்த சம்பவம் நேற்று இரவு 8 மணியளவில் இடம்பெற்றுள்ளதாகவும், சம்பவத்தில் துரைராஜா ரஜீவ் என்பவர் படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
    கூலி வேலை செய்து விட்டு வீடு திரும்பிய நபர் மீது இரண்டு மோட்டார சைக்கிளில் நான்கு பேர் துரத்தி துரத்தி தாக்குதல் நடத்தியுள்ளதுடன், வாளால் வெட்டியுள்ளனர்.
    இதன் போது கை, கால். மற்றும் முகம் ஆகிய பகுதிகளில் வெட்டு காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

    print

    Comments

    comments

    One thought on “யாழில் துரத்தி துரத்தி வாள்வெட்டு

    Leave a Reply