Thamarai News

தாமரை செய்திகள்

Tuesday, September 26th, 2017

now browsing by day

 

அம்பாறை தமிழ் மகா வித்தியாலயம் தற்பொழுது மூடுவதற்க்கான ஏற்பாடுகள்!

அம்பாறை வலயக்கல்வி பனிமனையின் அம்பாறை கோட்டத்திற்குட்பட்ட அம்பாறை தமிழ் மகா வித்தியாலயம் தற்பொழுது மூடுவதற்க்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

அம்பாறை வலயக்கல்வி பனிமனையில் 103 பாடசாலைகள் நிர்வாகம் செய்யப்படுகிறது .

அதில் ஒரே ஒரு தமிழ் பாடசாலை அம்/தமிழ் மகா வித்தியாலயம் ஆகும். இந்த பாடசாலையானது 1957.01.01 அன்று தொடங்கப்பட்டது, இந்த பாடசாலையில் கல்வி கற்ற பலர் இன்று அரச நிர்வாகியாக அங்கம் வகித்து வருகிறார்கள்.

கடந்த 1990ம் ஆண்டு வன்செயல் காரணமாக பாதுகாப்பு காரணம் கருதி பெற்றோர் தமது பிள்ளைகளை வேறு பாடசாலைக்கு மாற்றம் செய்தனர்,

எனினும் தற்பொழுது ஒரு மாணவர் கூட இந்த பாடசாலையில் இல்லாத காரணத்தினால் இந்த பாடசாலை பகுதிகளாக பிரிக்கப்பட்டு அரச காரியாலயங்கள் பல இயங்கிக் கொண்டிருக்கிறது.

எனினும் இந்த பாடசாலை நிர்வாகம் இன்று வரை இயங்கிக் கொண்டிருக்கிறது,

1957ம் ஆண்டு ஆரம்பிக்கட்ட இந்த பாடசாலையானது தொன்மை மிக்க பாடசாலையாகும்.

அத்தோடு அம்பாறை நகரில் தமிழ் பாடசாலை இது மாத்திரமே என குறிப்பிட்டு சொல்லலாம்.

அம்பாறை தமிழரின் பாரம்பரிய பாடசாலை தற்பொழுது மூடு விழா காண இருக்கிறது.

நம் முன்னோர்கள் கட்டி காத்த இந்த பாடசாலையை நாமே இழக்க நேரிட்டுள்ளது,

சகோதர்களே இதனை துரிதமாக தடுப்போம். எமது உரிமைகளை கேட்போம். நம் எதிர்கால சந்ததியினர்க்காக இதற்கு எதிர்ப்பு தெரிவிப்போம்.

நாம் தமிழன் என உலகுக்கு பறைசாற்றுவோம், அனைவரும் பாரபடசசமில்லாமல் பகிருங்கள்,

நம் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் முதல் அமைச்சர்கள் வரை இந்த செய்தி போய் சேர வேண்டும் பகிருங்கள் மானமுள்ள தமிழாய் இருந்தால் நன்றி

0

யாழில் துரத்தி துரத்தி வாள்வெட்டு

யாழ். தென்மராட்சி கெருடாவில் பகுதியில் இடம்பெற்ற வாள் வெட்டு தாக்குதல் சம்பவத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று இரவு 8 மணியளவில் இடம்பெற்றுள்ளதாகவும், சம்பவத்தில் துரைராஜா ரஜீவ் என்பவர் படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கூலி வேலை செய்து விட்டு வீடு திரும்பிய நபர் மீது இரண்டு மோட்டார சைக்கிளில் நான்கு பேர் துரத்தி துரத்தி தாக்குதல் நடத்தியுள்ளதுடன், வாளால் வெட்டியுள்ளனர்.
இதன் போது கை, கால். மற்றும் முகம் ஆகிய பகுதிகளில் வெட்டு காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

யாழில் திடீர் மழை

யாழில் திடீர் மழை: மகிழ்ச்சியில் மக்கள்
யாழ். குடாநாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இன்று காலை
இன்று காலை 06 மணி முதல் சுமார் ஒரு மணித்தியாலத்திற்கும் மேலாக நீடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த பல நாட்களாக நீடித்து வந்த கடும் வெப்பத்துடனான காலநிலை இதன் காரணமாகச் சற்று குறைவடைந்துள்ளது.
இந்த திடீர் மழை வீழ்ச்சியால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

  • குறைந்த விலையில் பிறந்தநாள் வாழ்த்து '' திருமண வாழ்த்து'' மரண அறிவித்தல் நினைவு நாள் '' மற்றும் ஏனைய விளம்பரங்கள் '' தாமரை பக்கத்தில் செய்ய உடன் அழையுங்கள் +94752017793
close