யாழ்ப்பாணத்தில் அதிகளவில் தற்கொலை செய்யும் பெண்கள்!

Image result for girl jumping off bridgeயாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் தற்கொலை செய்து கொள்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கண்டறியப்பட்டுள்ளது. வடமாகாண சுகாதார அமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் மூலம் இந்தத் தகவல் தெரியவந்துள்ளது. அந்த ஆய்வின் முடிவுகளுக்கமைய 2009 ஆண்டில் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் 124 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 2010ஆம் ஆண்டு 137 பேரும், 2011ஆம் ஆண்டு 141 பேரும், 2012ஆம் ஆண்டு 153 பேரும், 2013ஆம் ஆண்டு 158 பேரும், 2015ஆம் ஆண்டு 139 பேரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 2017ஆம் ஆண்டு ஜுலை மாலை 31ஆம் திகதி வரையில் 151 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக சுட்டிக்காட்டும் அந்த ஆய்வு அறிக்கை, அதிகமாக தற்கொலை செய்து கொள்வது பெண்கள் எனவும் குறிப்பிட்டுள்ளது. அவர்களில் 40 – 55 வயதுக்கு உட்பட பெண்களே அதிகமாக தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. அவர்களில் அதிகமானோர் தனியாக வாழ முடியாத சமூக பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. யுத்தத்தில் கணவர் மற்றும் உறவினர்களை இழந்தமையும், யுத்தத்தில் அனைத்தும் அழிந்து போயுள்ளமையும், அவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு தாக்கம் செலுத்தியுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, எதிர்பார்ப்பு நிறைவேறாமையினால் அதிகமானோர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும், தெரியவந்துள்ளது. அவர் மனநிலை மட்டத்தை அதிகரிப்பதற்கு ஆலோசனை வழங்கும் வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிப்பது அவசியம் என கூறப்பட்டுள்ளது.  
print

Comments

comments

Share Button

Related posts

2 Thoughts to “யாழ்ப்பாணத்தில் அதிகளவில் தற்கொலை செய்யும் பெண்கள்!”

Leave a Comment