யாழில் தேங்காய்களின் விலையில் திடீர் மாற்றம்!

இதுவே தேங்காய்களின் திடீர் விலை அதிகரிப்பிற்குக் காரணமெனத் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, சந்தைக்கு வெளியே வியாபார நிலையங்களில் ஒரு பெரிய தேங்காய் 95 ரூபா வரை விற்பனை செய்யப்படுகின்றது. தேங்காய்களின் விலை சடுதியாக அதிகரித்துள்ளமையால் வியாபார நிலையங்களின் உரிமையாளர்கள் பலர் தேங்காய் விற்பனையை இடைநிறுத்தியுள்ளனர். தேங்காய்களின் திடீர் விலை அதிகரிப்பால் நடுத்தர மற்றும் குறைந்தளவு வருமானம் பெறும் குடும்பங்கள் பெரும் பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ளன. இதேவேளை, கடந்த சில தினங்களுக்கு முன்னர் பெரிய தேங்காயொன்று 70 ரூபா முதல் 75 ரூபா வரையும், நடுத்தரத் தேங்காய் 50 ரூபாவாகவும், சிறிய தேங்காய் 40 ரூபாவாகவும் விற்பனை செய்யப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.  

Share Button
Read More

யாழ்ப்பாணத்தில் அதிகளவில் தற்கொலை செய்யும் பெண்கள்!

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் தற்கொலை செய்து கொள்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கண்டறியப்பட்டுள்ளது. வடமாகாண சுகாதார அமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் மூலம் இந்தத் தகவல் தெரியவந்துள்ளது. அந்த ஆய்வின் முடிவுகளுக்கமைய 2009 ஆண்டில் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் 124 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 2010ஆம் ஆண்டு 137 பேரும், 2011ஆம் ஆண்டு 141 பேரும், 2012ஆம் ஆண்டு 153 பேரும், 2013ஆம் ஆண்டு 158 பேரும், 2015ஆம் ஆண்டு 139 பேரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 2017ஆம் ஆண்டு ஜுலை மாலை 31ஆம் திகதி வரையில் 151 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக சுட்டிக்காட்டும் அந்த ஆய்வு அறிக்கை, அதிகமாக தற்கொலை…

Share Button
Read More